பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா

18

களங்கம் உண்டாகிவிடும். அவர்களை நாம் நமது சங்கத்திலிருந்து ஒதுக்கியே வைத்தாக வேண்டும், என்று கண்ணன் வெளிப்படையாகப் பிரகடனம் எதுவும் செய்யவில்லை. தன்னை மீறி யாரும் உள்ளே விழைந்து விட முடியாது என்ற நம்பிக்கையில் பேசாமல் இருந்துவிட்டான். எப்படியாலுைம் ஒருவருடைய உறுப்பினர் விண்ணப்பம் கமிட்டியின் பரிசீலனைக்கு வந்த பின்பே ஏற்கப்படும் என்ற பாதுகாப்பான விதியிருந்தது.

கண்ணன் முற்றிலும் எதிர்பாரதவிதமாக அடுத்த கமிட்டிக் கூட்டத்திலேயே அவனுக்கு ஒரு சிறு அதிர்ச்சி காத்திருந்தது.

கமிட்டியின் வழக்கமான அஜெண்டாவிலிருந்த மின்சார விளக்குகள், சாலை வசதி, குடிநீர்ப் பிரச்சினை எல்லாம் விவாதிக்கப்பட்டு முடிந்தபின் நிரந்தர இறுதி அயிட்டமான புதிய 'உறுப்பினர் சேர்த்தல்' என்பதை யார் புதிதாகச் சேர்ந்திருக்கப் போகிறார்கள் என்ற அசட்டையோடும், அசிரத்தையோடும் தலைவர் படித்தபோது ஒரு கமிட்டி உறுப்பினர், "பி. கே. அம்மிணி அம்மா, பதினொன்று மேற்கு கிராஸ் முதல் தெரு, ரூ. 10-" என்று பேரையும் பத்துரூபாய் நோட்டையும் பூர்த்தி செய்த உறுப்பினர் விண்ணப்பத்தையும் செயலாளரான கண்ணனிடம் எடுத்து நீட்டினார்.

தனக்குப் பிடிக்காத தன் பக்கத்து வீட்டுப் பெண்மணி தன் கவனமின்றியே நலன் நாடுவோர் சங்கத்துக்குள் நுழைய முயல்வதைக் கண்ணன் உணர்ந்து கொண்டான். உடனே உஷார் ஆனான்.

"இந்த விண்ணப்பத்தை உடனே ஏற்கக்கூடாது. இதைப் பற்றிக் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது."

கண்ணனின் இந்த ஆட்சேபணை அம்மிணி அம்மாவைத் தேடிப் போய் உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டு