பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

சுலட்சணா காதலிக்கிறாள்

‘ஜட்காவில்’ பூட்டிய குதிரைபோல் கண்களுக்கு மூடியிட்டுக் கொண்டு பாடம்-படிப்பு-மார்க்குகள்-டிஸ்டிங்ஷன் என்று ஒரே திசையில் மட்டும் பார்க்கப் பழகியிருந்தான். கவலை தெரியாமல் வளர்க்கப்பட்ட ‘சுயநலத்தில் அக்கறையும் பற்றுமுள்ள’ சராசரியான பணக்காரக் குடும்பத்து இளைஞனாக இருந்தான். அவனுடைய பயங்களையும் அறியாமைகளையும் பார்க்கும்போது சில வேளைகளில் சுலட்சணாவுக்குச் சிரிப்புக்கூட வரும்.

ஒரு முறை அவள் நூலகத்தில் ‘மார்க்ஸையும் ஏங்கெல்ஸையும்’ பற்றிய விமர்சன நூல் ஒன்றைப் படிக்க எடுத்தபோது, “நீங்க கம்யூனிஸ்டா?”-என்று பயந்து கொண்டே தணிந்த குரலில் அவளேக் கேட்டான் கனகராஜ். “மார்க்ஸையும் அவரது நண்பர்களையும் பற்றி ஆழ்ந்த அக்கறையோடு படிப்பதற்கு ஒவ்வொரு பொருளாதார மாணவனும் கடமைப்பட்டிருக்கிறான்” என்றாள் அவள்.

அதற்கு அவன் சொன்ன பதில் இன்னும் விநோதமாயிருந்தது. “இதையெல்லாம் படிப்பது நம்ம புரொபஸருக்குப் பிடிக்காது.”

“புரொபஸருக்குப் பிடிக்காத பல நல்ல விஷயங்கள் இருக்கலாம். அவை நமக்கும் பிடிக்காமல் போக வேண்டுமென்ற அவசியமில்லை மிஸ்டர் கனகராஜ்!”

“எங்கப்பாவுக்கும் இதெல்லாம் பிடிக்காது. பாடத்தை மட்டும் படி! கண்டதைத் தொடாதே என்பார்.”

“ஒருதலைப்பட்சமான ஞானம் என்பது ஃபாஸிஸத்தை விட மோசமானது. நமக்கு உடன்பாடில்லாதது நல்லதாயிருந்தாலும் அதைப் பார்க்கவே மாட்டேன் என்பது கோழைத் தனம்.”

“ஞானத்துக்காக நாம் யூனிவர்சிடிக்குள்ளே வரலே. ஃபர்ஸ்ட் கிளாஸ்லே டிஸ்டிங்ஷனேட பாஸ் பண்ணி நல்ல