பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

முள்வேலிகள்


வந்திருந்த அச்சுதன் என்ற கமிட்டி மெம்பருக்கு ஒரு தன்மானப் பிரச்னையாகி விட்டது. உடனே அவர் கிளம்பினார்:

"உழக்குலே கிழக்கு மேற்குப் பார்க்கிறது சரிப்படாது, இதிலே யோசிக்க என்ன இருக்கு?"

"அதுக்கில்லே! குடும்பத் தலைவரோ ஆண் பிள்ளைகளோ இல்லாத வீடுகளை மெம்பாரக்கறதுலே சில சிக்கல்கள் வரும்னு நினைக்கிறேன்."

"இப்பிடி ஆண் உறுப்பினர், பெண் உறுப்பினர்னு பேதப்படுத்தறது நல்லா இல்லே."

காலனியின் ஒரே தமிழ்ப்புலவரான மகிழ்மாறன் உடனே குறுக்கிட்டு, "தயவுசெய்து ஆண் பெண், என்று மட்டும் கூறுங்கள்! ஆண் உறுப்பினர் பெண் உறுப்பினர்ங்கிறது கேட்க நல்லா இல்லே"-என்றவுடன் ஒரே சிரிப்பலை கள் கிளம்பி ஓய்ந்தன.

சிறிதுநேரம் விவாதம் வேறு திசையில் போய்விட்டுத் தட்டுத் தடுமாறி மறுபடி பழைய் இடத்துக்கே திரும்பி வந்தது.

"மிஸ்டர் கண்ணன் தன் பக்கத்து வீட்டுக்காரர் உறுப்பினராவதை ஏன். தடுக்கிறார் என்பதைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை? இது சங்கத்தின் தலைவர்.

"நம்ம சங்கத்துக்குக் 'காலனி நலம் நாடுவோர் சங்கம்னு பேர் வச்சிருக்கோம். அதனாலே நலம் நாடாதவர்களையோ, நலத்துக்குக் கேடு உண்டாக்குபவர்களையோ இதில் சேர்க்காமல் இருப்பது நல்லது' என்பதுஎன் குருத்து."-இது கண்ணன்,