பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

சுலட்சணா காதலிக்கிறாள்


பல செலூலாய்ட் இளைஞர்களைப்போல்தான் கனகராஜூம் இருந்தான். அவனிடம் என்னென்ன தகுதிகள் இருக்கின்றன என்பது அவளுக்குத் தெரிந்ததைவிட என்னென்ன தகுதிகள் இல்லை என்பதே முதலில் தெரிந்தன. அவன் பிறந்து வளர்ந்த பரம்பரைப் பணக்காரக் குடும்பமும், வளர்க்கப்பட்ட சூழ்நிலையுமே அதற்குக் காரணமாயிருக்கலாம். சிலவற்றை நினைக்கவே பயப்படும்படி வளர்ந்திருந்தான்.

ஆனால் சுலட்சணா நேர்மாறான சூழ்நிலையில் வளர்ந்து உருவானவள் . அவள் தந்தை ஒரு டிரேட்யூனியன் லீடர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளுக்காகவும் தொழிற்சங்கங்களின் உரிமைகளுக்காகவும் போராடி வருபவர். தொழிலாளர் வழக்குகளுக்காக லேபர் கோர்ட் படிகளில் ஏறி ஏறிக் கால்கள் தேய்ந்தவர்.

ஆவடி, அம்பத்தூர் வட்டாரங்களில் இருந்த பல தொழிற்சாலைகளில் அவரது தொழிற்சங்கம்தான் பெரிய சக்தியாக விளங்கியது. மகளே பி. ஏ. வரை சென்னையில் படிக்கவைத்திருந்த அவள் தந்தை மேற்படிப்பு வெளியூரில் விலகி இருந்து படிக்கட்டும்; புதிய சூழ்நிலைகளைத் தனியே எதிர்கொள்ளக் கற்கட்டும் என்றுதான் அவளே உதயா பல்கலைக் கழகத்திற்கு அனுப்பியிருந்தார்.

பெண்ணுரிமை இயக்கத்திலும் பெண்விடுதலையிலும் அதிக நம்பிக்கையுள்ள் அவர் சிறுவயதிலிருந்து சுலட்சணாவை எதற்கும் கட்டுப்படுத்தியதில்லை. கண்டித்ததில்லை, அடக்கி வைத்ததில்லை. ஒடுக்கி வைத்ததுமில்லை.

அவருடைய போராட்டங்கள் நிறைந்த வாழ்வை அருகிலிருந்து ஒவ்வொரு நிமிஷமும் பார்த்ததால் பிரச்னைகளை எதிர் கொள்ளும் அச்சம் அவளுக்கு எதிலுமே ஏற்பட்டதில்லை. ‘நைட் ஷிப்ட்’ வேலைக்குப் போன தொழிலாளியைக் கைக் கூலிகள் அடித்துப் போட இரத்தக் காயத்தோடு தூக்கிக் கொண்டு சக தொழிலாளர்கள் தலைவர் வீட்டைத் தேடி