பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

171

கொள்ளலாம். மறுபடி அதற்கு என் அநுமதி தேவையே இல்ல சுலட்சணா!'

அடுத்தவாரமே ஊனமுற்ற குழந்தைகளின் நல்வாழ்வுக்காகத் திரட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பொது நிதியில் சேர்ப்பதற்காக அந்த மோதிரத்தை ஒரு கூட்டத்தில் ஏலம் விட்டு மூவாயிரம் ரூபாய் திரட்டிக் கொடுத்து விட்டாள் சுலட்சணா.

அவனுக்கு அது என்னவோ போலிருந்தது. சும்மா கேட்கிறாளே ஒழிய அந்த மோதிரத்தைத் தன் அன்பின் ஞாபகமாக அவளே கையில் அணிவாள் என்று எதிர்பார்த்தான் அவன். அவள் அப்படிச் செய்யாததில் அவனுக்குப் பெருத்த ஏமாற்றம் தான். அவளே அவல் முழுவதுமாக இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவளோ அவனே நன்றாகப் புரிந்து கொண்டிருந்தாள். அந்த மோதிரத்தை அவள் ஏலம் விட்ட அதிர்ச்சியிலிருந்து அவன் மீள அதிக நாளாயிற்று.

அவனுடைய பிறந்த நாள் வந்ததும், பல்கலைக்கழகப் பொடானிகல் கார்டன் முகப்பில் இருந்த மில்க் பார்லரில் ஒரு ரோஸ்மில்க் வாங்கி அவனிடம் பருகக்கொடுத்தாள் அவள், அதற்கே அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.

“நீ பத்துப் பைசாவுக்குக் கடலே மிட்டாய் வாங்கிக் கொடுத்தால்கூட எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும் சுலட்சணா!”

“ஏன்? என்னால் அதற்கு மேல் எதுவும் முடியாது என்ற சொல்கிறீர்கள்? செய்யமுடிவதற்கும் செய்யவிரும்புவதற்கும் நடுவே ஒரு வித்தியாசம் இருக்கும்.”

“புரிகிறது சுலட்சணா...நீ முடிந்ததைச் செய்கிற டைப் இல்லே. விரும்புகிறதைத்தான் செய்வாய் என்பது எனக்குத் தெரியும்.”