பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

1175


தனிப்பட்ட மாணவர்களோ, வெளி அரசியல் சக்திகளோ தலையிட்டு நடத்தும் எந்தச் சமூகப்பணி முகாம்களிலும் மாணவர்களோ, மாணவிகளோ கலந்துகொள்ள வேண்டாமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அப்படிப்பட்ட ஏற்பாடுகளில் இந்தப் பல்கலைக்கழகம் எந்தப் பங்கும் பொறுப்பும் ஏற்காது என்பதை இதன் மூலம் அறிவித்துக் கொள்கிறோம்” என்று கடல் பிள்ளை அனுப்பியிருந்த சர்க்குலர் சுலட்சணாவை எரிச்சலூட்டினாலும் அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. அவளுடைய சமூகப்பணி முகாமில் பங்கேற்க இசைந்து பேர் கொடுத்திருந்தவர்களும் இந்தச் சுற்றறிக்கை பற்றிச் சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை.

இந்த அறிக்கை வருமுன்பே சுலட்சணாவிடம் சாக்குப் போக்குச் சொல்லித் தப்பித்துக்கொள்ள நினைத்திருந்த கனகராஜ் இந்த அறிக்கையும் வந்துவிட்டபிறகு நிச்சயமாகத் தப்பித்து ஒதுங்கிக்கொண்டுவிடவே நினைத்தான். சுலட்சணா அவனை வற்தபுறுத்தவில்லை.

“வர்க்க அடிப்படையில் சிந்தித்தால்கூட நீங்கள் இந்த முகாமில் உழைக்க முன்வர மாட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் சார்ந்திருக்கும் வர்க்க அளவு வேறு மாதிரியானது.”

“வர்க்கம் என்று ஒன்றுமில்லை சுலட்சணா! ஏர்க்காடு மலையில் எங்களுக்கு ஒரு பங்களா இருக்கிறது. இந்தக் கோடைக்கு இதமாக வெயிலே தெரியாமல் ஜிலுஜிலு: என்றிருக்கும். அங்கே போய்க் தங்கிப் படிக்கலாம் என்று நினைக்கிறேன். விரும்பினுல் நீ கூட என்னோடு வரலாம். உன் வருகையால் ஏர்க்காடு எனக்கு இன்னும் குளிர்ச்சியாக இருக்கும்”.

எனக்கு வேண்டிய குளிர்ச்சி இங்கேயே இருக்கிறது கனகராஜ் விடுமுறைக்குள் இந்த ஒரு கிலோமீட்டர் தொலைவு சாலைபோடும் வேலையை நானும் மற்றமாணவர்களும் செய்து முடிக்க வேண்டும். குட் பை! நீங்கள் போகலாம்’-என்றாள் சுலட்சணா.