பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா

218

“மறக்கலேம்மா! அத்தனை சுலபமா மறந்துட முடியுமா அதை எல்லாம்? ஒரு எக்னாமிக்ஸ் ஸ்டூடண்டுக்கு அக்ரி க்ராஜுவேட் மேலே பிடிப்பு வந்ததுதான் ஆச்சரியம்! ” “...சார் ஏன் சுற்றி வளைக்கிறீங்க? இப்போ என்னக் கூப்பிடனுப்பின விஷயம் என்னன்னு சொல்லுங்க...எனக்கு நேரமாகுது. லேடிஸ் ஹாஸ்டல் கேட்டை க்ளோஸ் பண்றத்துக்குள்ள போகணும்." .

'நீ முன்னை கனகராஜோடப் பழகிக்கிட்டிருந்தே இல்லே...'

"ஏன்...? இப்பவும் பழகறேன். நாங்க கிளாஸ்மேட்ஸ். ஒரே சப்ஜக்ட் படிக்கிறோம். பழகாம இருக்க முடியாது.

'இப்போ அத்தனை நெருக்கம் இல்லைன்னு கேள்வி. ஏதோ மனஸ்தாபம்னு சொன்னாங்களே...'

“யார் சொன்னங்க?... எதுக்காகச் சொன்னாங்க?..."

வேற யாரு? கனகராஜேதான் சொன்னான். உன்னோட பழக்கம் குறைஞ்சதிலேருந்து அவன் அரை ஆளாப் போயிட்டான். உனக்குத் தெரியும்னு நெனைக்கிறேன். கனகராஜ் ரொம்பப் பெரிய ஃபேமிலியில வந்தவன். அவன் ஃபாதர் பெரிய கோடீசுவரர். நம்ம புரோ சான்ஸ்லருக்கு ரொம்ப வேண்டியவர்.”

“சார்! இதெல்லாம் இப்ப எதுக்கு வீணா? என்ன விஷயம்னு மட்டும் சொல்லுங்க... ” அவளை எப்படிக் கன்வின்ஸ் செய்து கனகராஜுக்காகப் பரிந்து பேசுவதென்று தெரியாமல், திணறினார் டீன். அவளோ அவ்வப்போது அவரது பேச்சை இடைவெட்டினாள். தவிர்த்தாள்.

கனகராஜ் ரொம்பத் தங்கமான பையன். படிப்பில் முதல் நம்பர். தானுண்டு தன் காரியம் உண்டு என்று

மு-14