பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

227

“பையனோட படிப்பு, மூளை எதிர்காலம் எல்லாத்தையுமே இப்போ இப்பிடிப் பாழாக்கிட்டாளேப்பா. அப்படி என்னப்பா ரம்பையா திலோத்தமையா? நம்ம பையனைப் போல ராஜாவாட்டம் ஒரு பையனைக் கசக்குதா அவளுக்கு? அவனுக்கென்ன குறை? அழகில்லையா? பணமில்லையா? "படிப்பில்லையா? ” “எல்லாம் இருக்கலாம்! ஆனா அதெல்லாம் அந்த சுலட்சணாவுக்குப் போதுமானதா இல்லியே? அதை எல்லாம் அவ பொருட்படுத்தலியே? ” அப்பிடி அவளென்ன பெரிய கொம்பனுக்குப் பிறந்தவளா? யாருப்பா அந்தப் பொண்ணு?’’

“சுலட்சணா; மெட்ராஸ்லே சின்னச்சாமின்னு ஒரு பெரிய டிரேட் யூனியன் லீடரோட மகள்'”

அவனைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். அப்பிடி ஒண்னும் காசு பணமுள்ள ஆள் இல்லியே அவன்? ரொம்ப முரண்டுக்காரன். இன்னும் தொழிலாளிகளோட தொழிலாளியாக் குடிசையிலியே தானே இருக்கான் அந்த ஆளு? அவளோட மகள்தானா இந்த முரண்டு பிடிச்ச பொண்ணு?"

அவ.அப்பனைப் போலவே மகளும் முரண்டு பிடிச்சவ. ஆனால் நல்ல அழகி. கொள்கையிலே பிடிவாதக்காரி

கனகராஜ் தாயில்லாப் பிள்ளை. அவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா எனக்கு வாரிசே இல்லைங்கிறது உனக்குத் தெரியாததில்லே சுகவனம்! அவளோட நன்மைக்காகவாவது நான் அந்த பெண்ணை வசப்படுத்திச் சம்மதிக்கவச்சு இந்தக் குடும்பம்கிற வண்டியிலே கொண்டாந்து பூட்டியாகனும்ப்பா... ."

அதிலே எனக்கு நம்பிக்கையில்லை. நேரே மெட்ராஸ் போயி இவ அப்பன்காரன் கிட்ட வேணும்னாப் பேசிப் பாருங்க. இவ கிட்டப் பேசிப் பிரயோசனமில்லை. இவ உங்க பேச்சுக்கு இணங்கி வசப்படறது கஷ்டம்.'