பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

229


"யூனிவர்ஸிடியிலிருந்து சேலம் வந்த நாளிலேயிருந்து இங்கே இவன் என்னமோ பறிகுடுத்தவன் மாதிரியிருக்கானே சுகவனம்?’’ . . -

அதுவும் எனக்குப் பிடிக்கலே? விட்டுப் பிடிடா. 'இந்த சுலட்சணா இல்லாட்டா இன்னொரு விலட்சணா என்று எவ்வளவோ அவன் கிட்டச் சொல்லிப்பார்த்தாச்சு. இருந்தும் அவன் மனசைத் தேத்திக்கல. இன்னும் அவளுக்காகத்தான் உருகறான்! அவளை நிக்னச்சுத் தான் உயிரைவிடறான்.'

சரி! இந்த மேட்டரை இனிமேல் எங்கிட்ட விட்டுடு! ஐ வில் டாக் டு ஹெர் ஃபாதர். இன்னிக்கே மெட்ராஸ் போறேன்'-என்று டெலிபோன் உரையாடலை முடித்தார். கனகராஜின் தந்தை தர்மராஜன். எப்படியும் ஒரு கை பார்த்துவிடுவதென்ற உறுதி வந்திருந்தது அவருக்கு.

அவர் உடனே சொன்னபடியே செய்தார். சென்னைக்குச் சென்றார். தேடி அலைந்து சுலட்சணாவின் தந்தையைக் கண்டு பிடித்துச் சந்தித்தார். தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொண்டு எல்லா விவரமும் சொல்லி நிலைமையை விளக்கினார். பொறுமையாகச் சகலத்தையும் கேட்டுக் கொண்ட சுலட்சணாவின் தந்தை தோழர் சின்னச்சாமி சுருக்கமாக ஆனால் தீர்மானமான தன் பதிலைக் கூறனார்

சின்ன வயசிலிருந்தே நான் அவளை இதை இப்படிச் செய்; அதை அப்படிச் செய்யாதே-என்றெல்லாம் உத்தரவு போட்டோ, அதட்டியோ வளர்க்கலே. அவள் என் இஷ்டப்படி வளர்ந்தாள் என்பதை விடத் தன் இஷ்டப்படி வளர்ந்தாள் என்பதே சரி! பெண்ணுரிமை, பெண் விடுதலைன்னு பேசறதோட விட்டுவிடாமல் அவளுக்கு இந்தச் சுதந்திரத்தை எல்லாம் நான் உண்மையிலேயே கொடுத்தேன்'- -

ஆனாலும் இப்போ அவள் நீங்க சொல்றதைக் கேட்பாள்னே எனக்குத் தோன்றுகிறது'

மு-18