பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

281



வந்த தோரணையிலேயே தெரிந்தது. டீனின் மிரட்டலான பாணியை அவள் வெறுத்தாள்.

பல்கலைக்கழக டீன் தர்மராஜைக் கனகராஜின் தந்தை' என்று அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

“என் குடும்பத்தின் எதிர்காலம் உன் கையிலேதான் இருக்கும்மா...நீ கொஞ்சம் பெரிய மனசு பண்ணி...' ” “ரொம்ப ஸெண்டிமெண்டலப் பேசறீங்க, விஷயத்தை அறிவு பூர்வமாக் காரண காரியத்தோட நீங்க சிந்திக்கணும். வெறும் உணர்ச்சி பயன்படாது. ” மெட்ராஸ் போய் உங்கப்பாவைக் கூடப் பார்த்தேன். அவர்தான் உன்னைப் பார்த்துப் பேசச் சொன்னார்.”

“அவரை எதுக்காகப் போய்ப் பார்த்தீங்க...?”

முடிந்தவரை விவரமாகத் தர்மராஜூம், டீனும் அவளுக்கு விவரித்தார்கள். அவளால் கைவிடப் பட்ட கனகராஜின் பரிதாப நிலைமையையும் எடுத்துச் சொன்னார்கள். அவள் எந்த உணர்ச்சியையும் காண்பிக்காமல் அதை எல்லாம் பொறுமையாகக் கேட்டாள்.

சுலட்சணா அதுவரை வெளியே உட்கார்த்திவிட்டு வந்திருந்த வீராசாமியைப் போய் அழைத்து வந்தாள். அவர்களுக்கு அவனை அறிமுகப்படுத்தினாள். தன் வலது கையை உயர்த்திக் காட்டி, இவர் என்னைக் காதலிப்பதற்கும் நான் இவரைக் காதலிப்பதற்கும் அடை யாளமாக எங்கேஜ்மெண்ட்” ரிங்கூடப் போட்டுக் கொண்டிருக்கேன். செப்பு மோதிரம்தான். இதைவிரலில் அணிய உங்க ஸன் ஒரு வைர மோதிரமே கொண்டு வந்து தந்தார். அதை நான் விரல்லே போட்டுக்கலே. உடல் ஊனமுற்றோர் நிதிக்காக ஏலம்விட்டுப் பணம் திரட்டிக் குடுத்துட்டேன். ஐஃபீல் வெரி ஸாரி...நீங்க