பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

முள்வேலிகள்


களுக்கு இல்லை. அவர்கள் கண்ணனுக்குத் தெரியாமல் அக்கம்பக்கத்தாரிடம் பழகி வந்தார்கள். இது கண்ணனுக்கும் தெரிந்துதான் இருந்தது. எப்படியாவது இதைத் தடுத்தாக வேண்டுமென்று அவனும் யோசித்துக் கொண்டு தான் இருந்தான். கண்மூடித்தனமான விரோத வெறி அவனுள் மூண்டிருந்தது.

அவனைப் போன்ற மத்திய தர வர்க்கத்து என். ஜி. ஒ. வுக்குக் காம்பவுண்டுச் சுவர் எடுக்கப் போதுமான பணவசதி குதிரைக் கொம்பாக இருந்தது. ஆனாலும் ஏதோ ஒரு வெறியில் வட்டிக்குக் கடன் வாங்கியாவது காம்பவுண்டுச் சுவர்களை எடுத்து விடுவது என்ற முடிவிற்கு வந்திருந்தான் கண்ணன். மனைவி எவ்வளவோ தடுத்துப் பார்த்தாள்: "இப்போ இருக்கிற பணமுடையிலே காம்பவுண்டுச் சுவர் இல்லாட்டி என்ன கொறைஞ்சிடப் போவுது. வீண் செலவை இழுத்து விட்டுக்கிட்டுப்பின்னாலே கடனை அடைக்கக் கஷ்டப்படப் போறீங்க..."

அவள் இப்படிக் கூறியதை அவன் பொருட்படுத்தவே இல்லை. -

"உன்னை ஒன்றும் யோசனை கேட்கலை. எதைச் செய்யனுமோ அதைச் செய்ய எனக்குக் தெரியும்." கண்ணன் மனைவியிடம் எரிந்து விழுந்தான்.

உண்மையில் உடனே சுற்றுச் சுவர் எடுப்பதற்கான எந்த அவசரமும் அப்போது இல்லை. பின்புறம் ஒடிய கால்வாய் எல்லா வீடுகளுக்கும் ஒரு வகையில் எல்லையாகவும், பாதுகாப்பு அகழியாகவும் இருந்தது. முன்புறம் சாலை இருந்ததனால் எந்நேரமும் பயமில்லாமல் ஆள் நடமாட்டமும் கலகலப்பும் இருந்தன. இருபக்கத்திலிருந்த அண்டை வீட்டார்கள் இருவர். மேலும் ஏற்பட்ட வெறுப்பைத் தவிர, காம்புவுண்டுச் சுவர் எடுக்க வேறு வலுவான காரணங்களே