பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா

51

என்று பெயர் சூட்டுவதே சாலச் சிறந்ததாய் இருக்கும்" - என்றார் புலவர் மகிழ்மாறன். 'சாஸ்தா நகர்' என்பதில் வருகிற வடமொழி 'ஸ்’ அவருக்குப் பிடிக்கவில்லை.

காலனிவாசிகளில் ஒருவரான தமிழ்ப்புலவர் மகிழ்மாறனே மறுக்கவும் பாகவதருக்குச் சங்கடமாகப் போய் விட்டது.

"கண்ணகி மதுரையை எரிச்சது மாதிரி இந்தக் காலனியும் ஏதாவது சாபத்திலே எரிஞ்சிடுமோன்னு பலருக்கு ஒரு அச்சான்யம் உண்டாகும்."

"இதை நான் வன்மையாக மறுக்கிறேன். தமிழர் காப்பியமாம் தன்னிகரற்ற சிலம்பின் மாபெரும் பத்தினி கண்ணகிக்குக் களங்கம் உண்டாக்கும் முயற்சி இது! கண்ணகி எரித்தது மதுரையிலுள்ள தவறு புரிந்தவர்களே மட்டுமே! இங்கும் தவறு புரிந்தவர்கள்-புரிகிறவர்கள் குடியிருந்தால் அவர்களுக்குத்தான் இப்படிக் கண்ணகி நகர் எனப் பெயரிடுவது பிடிக்காது. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது தமிழர் பழமொழி! குற்ற முள்ளவர். எரிக்கப்படவே வேண்டும்."

புலவர் மகிழ்மாறன் சுற்றி வளைத்து எதைத் தொடுகிறார் என்று புரிந்து பாகவதர் அடங்கி விட்டார். சங்கத் தலைவருக்கோ பாகவதரை விரோதித்துக் கொள்ள விருப்பமில்லை. அவர் சமாதானமாக முடித்தார்:

"புலவர் மகிழ்மாறன் அவர்களுக்கும் பாகவதர் அவர்களுக்கும் பொதுவாக நான் ஒரு பெயர் சொல்லுகிறேன். நல்ல தமிழில் 'ஐயப்பா நகர்' என்று வைத்து விடுவோம். பாகவதர் கூறிய அர்த்தமும் வந்து விடுகிறது. மகிழ்மாறன்