பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

61

 எதிர்க்க இவர்கள் தன்னோடு துணை நிற்கிறார்கள் என்ற ஒரே காரணத்தால் கண்ணன் இவர்களைத் தாங்கிச் சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன் என்ற சர்வதேச இராஜ தந்திரக் கொள்கையை அண்டை வீட்டார் விஷயத்திலும் கண்ணன் கடைப்பிடித்தான். எதிரியின் எதிரிகளை நண்பர்களாக்கிக் கொள்ள ஆகிற செலவைவிடச் சிக்கனமாக எதிரிகளையே நண்பர்களாக்கிக்கிக் கொள்கிற மிகச் சுலபமான முயற்சியைக் கண்ணன் ஏனே மறந்து போயிருந்தான். குருட்டுத் தனமான துவேஷம் அவன் கண்களை நன்றாக மூடி மறைத்திருந்தது.

9

காலனி நலன் நாடுவோர் சங்கத்தின் உடனடியான அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு பாகவதர், அம்மிணி அம்மாள் முதலிய இருபத்தைந்து அங்கத்தினர்கள் கையொப்ப மிட்டுத் தலைவருக்கு அனுப்பிய பதிவுத் தபால் கடிதத்தில் 'உடன் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யவும்' என்ற தலைவரின் குறிப்பும் சேர்க்கப்பட்டுக் கண்ணனுக்கு வந்தது. சில அவசரப் பிரசினைகளை விவாதிக்க உடனே கூட்டத்தைக் கூட்டும்படி இருபதுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கையொப்பமிட்டுக் கோரினால் தலைவர் அனுமதியுடன் செயலாளர் பதினைந்து நாள் முன்னறிவிப்புடனே கூட்டத்தைக் கூட்டியாக வேண்டும் என்று சங்க விதிமுறை கூறியது. இப்போது பாகவதர் அந்தத் துருப்புச் சீட்டை வெட்டியிருந்தார்.

கண்ணன் பாடு தர்மசங்கடமாகப் போயிற்று. 'மின்சார ஒவர் ஹெட் லயன்" பற்றி அவன் பக்கத்து வீட்டாரோடு கூப்பாடு போட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது, புலவர் மகிழ்மாறன் காலனிவாசிகள் வீட்டுக் காம்பவுண்டுச் சுவர்