பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105

தழுவுதல் வேண்டும். மருந்து கசப்பானதுதான். ஆனால் அப்பொழுது அவர்களுக்கு அந்த வைத்தியம் தேவைப்பட்டது. பகைமையும் பயமும் அலைக்கழித்தவர்களாக தலைகளை ஆட்டி ஒப்புதல் அளித்தனர். கொச்சியில் இருந்து போர்ச்சுக்கீசியரின் சிறிய படையணி ஒன்று அவர்களது கடற்கரை குடியிருப்பிற்கு காவலாக நின்றது. அந்த அணியின் செலவிற்காக ஆண்டுதோறும் 1500 குரஸோடா பணம் கொடுக்க பரவ ஜாதித்தலைவர் ஒப்புக் கொண்டார்.[1] அதன்பின்னர், நிபந்தனையின்படி பரவரது "பட்டங்கட்டிகள்" சிலர் கொச்சிக்கு சென்று போர்ச்சுகல் நாட்டு மத குருக்களை சந்தித்து ஆயுத உதவி பெற்றதுடன், ஒரே நாளில் 20,000 பரவர்கள் கத்தோலிக்க கிறித்துவ மதத்தை தழுவ ஏற்பாடு செய்தனர்.[2] சிறிய இடைவெளியில் மீண்டும் பரவர்கள் இசுலாமியரைத் தாக்கினர். பெரும் சேதத்தை விளைவித்தனர் சில நூறு முஸ்லீம் குடும்பங்கள் தூத்துக்குடி கடற்கரைப்பகுதியில் இருந்து இன்னும் வடக்கே, - இராமநாதபுரத்தில் - கிழக்கு கடற்கரையில் குடியேறினர். கீழக்கரையும், வேதாளையும் அவர்களது புதிய தாயகமாகின.

இந்த அவல நிகழ்ச்சிகளினால், பல நூற்றாண்டுகளாக தெற்கு கடற்கரையில் அமைதியுடனும், செல்வாக்குடனும் வாழ்ந்து வந்த இசுலாமியரது இயல்பான வாழ்க்கை, வாணிபம், சமுதாய சிறப்பு ஆகிய நிலைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இத்தகைய இழப்பை பிந்தைய ஆண்டுகளில் கூட ஈடு செய்ய இயலவில்லை என்பதை வரலாறு சுட்டுகிறது. இத்தகைய சமூக சீர்குலைவிற்கு அன்று தமிழக அரசு எனப் பெயரளவில் இருந்த வடுகரது ஆட்சிதான் காரணம் என்பதையும் வரலாறு துலக்குகிறது. பொய்மைப் பிரச்சாரத்தினால், தமிழக மக்களை ஏமாற்றி, மதுரை சுல்தான்களது ஆட்சியைக் கைப்பற்றிய வடுகர்கள், தமிழக மக்களை, குறிப்பாக கடற்கரையோர குடிகளை பரங்கிகளது குறுக்கீடுகளில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. அரசின் இயலாத்தன்மை காரண


  1. Arunachalam - History cf Pearl fishery of Tamil Coast(1952) p. 19.
  2. Arunachalam - History of pearl Fishery of Tamil coas(1952)