பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படைப்பதற்கு உறுதுணையாக இருந்த கொடை நாயகர்கள் தமிழ் முஸ்லீம்களே. தமிழை காத்த புரவலராக மட்டும் அல்லாமல் பல தமிழ் இலக்கியங்களின் படைப்பாளிகள் என்ற பெருமையும் தமிழ் இஸ்லாமியருக்கு உண்டு.

இத்தகைய அருமையும் பெருமையும் கொண்ட தமிழ் முஸ்லீம்களில் வரலாற்று ஆய்வினைத் துாண்டும் தொடக்க முயற்சியாக சீதக்காதி அறக்கட்டளையினரது 1988ல் போட்டியின் பொருளாக அமைந்து பரிசு பெற்ற எனது இந்த தொகுப்புரையை அச்சேற்றி, கீழக்கரையில் நடைபெறும் ஐந்தாம் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டு விழாவில் வெளியிடுவது பெருமகிழ்ச்சிக்குரியது.

இந்த பயனுள்ள பெரும் தொண்டில் பேரார்வம் கொண்டுள்ள சீதக்காதி அறக்கட்டளையின் தலைவரும் எனது விழுமிய அன்புக்குரியோருமாகிய அல்ஹாஜ் கே. டி. எம். எஸ். அப்துல்காதிர் (ஜமாலி) தைக்காவாப்பா அவர்களுக்கும், சென்னை இஸ்லாமிய பண்பாட்டு ஆய்வு மையத்தின் செயலர் பேரன்புமிக்க அல்ஹாஜ் கேப்டன் என். ஏ. அமீர் அலி எம். ஏ. அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைப் புலப்படுத்துகிறேன்.


எஸ். எம். கமால்
நூலாசிரியர்