பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். சி.பா. 99

பர்னார்ட்ஷாவைப் பார்க்கிலும் வரதராஜனார் ஒரு துறையில் சிறந்து விளங்குகிறார் என்பது எனது ஊகம். பர்னார்ட்ஷா பலப்பல நூல்களை எழுதி எழுதி முதுமை எய்தியவர். இம் முதுமையில் அவர்க்கு வழங்கும் இக்கால அரக்கப் போர்க்காட்சி வாழ்க்கைக்குக் கிறிஸ்து வேண்டும்; பைபில் வேண்டும்’ என்னும் எண்ணத்தை அவரிடம் அரும்பச் செய்து வருகிறது. வரதராஜ னார்க்கோ அக்கருத்து இளமையிலேயே முகிழ்த்தது; வாழ்க்கைக்குச் சமயம் தேவை; கடவுள் தேவை!’ என்று இளமை வரதராஜனார் பேசினார்; எழுதினார். கீழ்நாட்டு இளமை மேல் நாட்டு முதுமையை விஞ்சி நிற்கிறது.

“கூட்டம் கூடுதற்கு முன்னர்க் காலையிலும், கூட்டம் முடிந்த பின்னர் மாலையிலும் வரதராஜனாரும் யானும் ஆற்றங்கரைக்குச் செல்வோம்; தோட்டங்கட்குப் போவோம்; இயற்கையை எண்ணுவோம்; பேசுவோம்” உண்போம். அவர் திருப்பத்துாரில் வதிந்தபோது இயற்கை யோடியைந்த வாழ்வு அவரிடம் தானே தவழ்ந்தது. நண் பரது சென்னை வாழ்க்கை இயற்கையிலே செயற்கையைச் சேர்த்தது. அடிக்கடி நண்பரைச் சென்னையில் காண் பதில் எனக்கு இன்பம் உண்டாகிறது; அதே நேரத்தில் செயற்கையின் சேர்க்கை நினைவு தோன்றும்போது துன்பம் உண்டாகிறது. அன்பரும் சிற்சில போது வருந்து வது எனக்குத் தெரியும்.

வரதராஜனார் தமிழறிஞரா? சீர்திருத்தக்காரரா? அவர் தமிழறிஞர் என்பது வெள்ளிடைமலை, சீர்திருத்தக் காரர் என்பது உள்ளிட்ட விளக்கு. அவரது சீர்திருத்தப் பேச்சுக்களை யான் பலமுறை செவிமடுத்துள்ளேன். அவர் வாழ்க்கைச் சீர்திருத்தக்காரர். சமூகச் சீர்திருத்தக் காரர். நாட்டுச் சீர்திருத்தக்காரர். என்பதில் ஐயமில்லை.