104 / மூட்டம்
☐சு.சமுத்திரம்
உடைத்துக் களைத்துப் போனவர்கள் அந்தத் தண்ணீரையே தாகத்திற்குக் குடித்தார்கள். அடித்துப் போட்ட மாட்டின் ரத்தத்தை புலி குடிக்குமே அப்படி... சிலர் கையலம்பிக் கொண்டார்கள். இதற்குள் டெலிபோன் கம்பிகள் தலைகீழாய்த் தொங்கின. சங்கரசுப்பு பழனிவேலிடம் ஒரு சந்தேகம் கேட்டார்.
‘இன்னும் அரை கிலோ மீட்டர் வரைக்கும் குழாய் போகுதே, அதில இருக்கிற தண்ணிர் அவனவனுக்கு ஒரு நாளைக்கு போதுமே! இப்படி விட்டுக் கொடுக்கலாமா?’
‘நீர் எந்தக் காலத்திலேயாவது விவசாயம் பார்த்திருந்தால் தெரியும்... இந்தப் பக்கம் பள்ளம். அந்தப் பக்கம் மேடு. அதோ பாருங்க, தண்ணீர் தபதபன்னு தரையில விழுகிறதை...’
சங்கரசுப்பு, திருப்தியோடு தலையாட்டியபோது, பழனிவேல் கூட்டத்திற்கு ஆணையிட்டார்:
‘ரோட்டை மறிச்சுக்கிட்டு நில்லுங்கப்பா. இப்படி மனிதச் சங்கிலி மாதிரி இல்ல, இரும்பு வேலி மாதிரி நிக்கணும்’
இதற்குள் குண்டாந்தடித் தொண்டர்கள் கூட்டத்தை பிய்த்துப் பிய்த்து வரிசையாக்கினார்கள். தென்முகமாய் ஐம்பது பேரும், வடமுகமாய் ஐம்பது பேரும் நிறுத்தப்பட்டார்கள். மற்றவர்கள் அங்கும் இங்கும் சிதறி நின்றார்கள். மசூதிபாளைய முனையில், ஒரு கூட்டம் திரண்டு நிற்பது தெரிந்தது.
சிறிது நேரத்தில், மசூதிபாளையத்தில் இருந்து ஒரு கார் வந்தது. குண்டாந்தடித் தொண்டர்கள் அதைப்போகவிடாமல் சாலை மறியல் செய்தபோது, உள்ளே அந்தக் காரையே நொறுக்கிவிட்டு வெளியே வரப்போவது போல் ‘ஒரு கர்ப்பிணிப் பெண் அலைமோதினாள். அவள் அம்மா