107 / மூட்டம்
☐சு.சமுத்திரம்
ஸ்கூட்டர் சத்தம்!...
அந்தப் பிரதான சாலையிலிருந்து சம்சுதீன் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தான். அவனுக்கு விபரம் தெரியாது. பழனிவேலுக்கு ஆத்திரம். அதனால் அவனுக்குக் காத்திருக்க வேண்டுமென்ற நடப்பு புரியாமல், புத்திமட்டாகக் கத்தினார்:
‘அதோ வரான் பாரு திவான் முகம்மதுவோட பயல்... காலேஜில் இந்துப் பெண்கள்கிட்ட வம்பு பண்ற பயல்... செருக்கி மகனை ஒரே போடாப் போடுங்கடா! ஓடுங்கடா! பிடிங்கடா!’
அந்தக் கூட்டத்தில் ஒரு பகுதி ஆயுத பாணியாய் சம்சுதீனைப் பார்த்து ஓடியது. சிறிது நேரம் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு பிரமித்து நின்ற சம்சுதீன், அந்த ஸ்கூட்டரைத் திரும்பப் பார்த்தான். அதற்குள் எல்லாம் முடிந்து விடும் என்பதை உணர்ந்தவன் போல் அந்த ஸ்கூட்டரிடமிருந்து. விடுபட்டு தலைதெறிக்க ஓடினான். கூட்டமோ ‘செய்ராம்’ ‘செய்ராம்’ என்று கத்தியபடி அவனைத் தொடர்ந்து துரத்தியது.
9
அந்த வீட்டின் அகமும் புறமும் போல், மாரியப்பன் ஒடுங்கிக் கிடந்தான்.
அந்த வீட்டின் பின் பகுதியில் பன்றிக்குடில் மாதிரியான ஒரு பொந்து அறை. வெளி அடைப்பு இல்லாதது. தட்டு முட்டுச் சாமான்களைப் போட்டு வைப்பதற்காக அமைக்கப்பட்ட அந்தப் பொந்தில் அவன் அதே வகைப் பொருள் மாதிரியே கிடந்தான். தலையை நிமிர்த்தினால் அது தட்டும் என்பதால், அசல் காயலான்கடை கோணி மாதிரியே சுருண்டு கிடந்தான். இரண்டு நாட்களுக்கு முன்பு இதோ அந்த அமீர் வீட்டிற்குள் தென்னை மரத்தில் ஏறியும், கருவாட்டுக்