உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூட்டம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

☐சு.சமுத்திரம்

மூட்டம் / 10

பூச்சி புழுக்கள் மாதிரியான, அரை நிர்வாண ஆண்களும், தாங்கள் ஆணா அல்லது பெண்ணா என்று அந்தக் கணத்தில் எந்தப் பிரக்ஞையுமில்லாமல் உடையே உடைந்து போக இயங்கிக் கொண்டிருந்த பெண்களுமாக கரணம் தப்பக்கூடிய மரண விளிம்பில் நின்றபடி கைகளைத் தூக்கிக் கொண்டிருந்தார்கள்.

காண்ட்ராக்டர் ராமலிங்கம் ‘என்னய்யா வேலை செய்றீங்க வேல...’ என்று அவர்கள் வேலை செய்வதைச் சரியாக பார்க்காமலேயே ஒரு கத்துக் கத்திவிட்டு வெளியே வந்தவர், தன்னையே கண்காணிப்பதுபோல் பார்த்த திவான் முகமதுவைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டார். பதில் கும்பிடு பற்றிக் கவலைப்படாமலே, ‘வேலையா பாக்கீக வேல... கூலிய மட்டும் கூட்டிக் கேட்டா எப்படி’ என்று திவானைக் கண்கள் நோட்டமிட, அந்த மசூதியின் துழைவு வாயிலுக்கு மீண்டும் போய் ஒரு எகிறு எகிறினார்.

தொழுகைக்காக வருகிறவர்களின் தலைகள் தொலைவில் கூடத் தெரியாத நேரம், சூரியன் மேற்குத் திக்கில் நோயாளியாகி, கண்ணை மூடி மூடித் திறந்து கொண்டிருந்த வேளை.

அந்த மசூதியின் எதிர்த் திக்கிலிருந்தும், கிழக்குத் திசையிலிருந்தும் ஏழெட்டுப் பெண்கள்... தெற்கில் ஒரு பத்துப் பெண்கள்... தலைகளில் கோஷாக்கள் இல்லை. அதை ஈடுகட்டுவது போல் நெற்றிக்கு கோஷா போட்டதுமாதிரி தலைமுடி தாறுமாறாகச் சிதறிக் கிடக்க, நெற்றிகளை ரத்தமாக்கிய குங்குமக்காரிகள்... என்றாலும் இளசுகள் பிளாஸ்டிக் குங்குமப் பொட்டை வைத்திருந்தனர். பெரிதுகள் நெற்றி போதாது என்பதுபோல் சிவப்பு சூரியன் மாதிரி ஆன பொட்டுகள் வைத்திருந்தனர். உல்லி உல்லி வாயில், சுங்கடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/12&oldid=1843557" இலிருந்து மீள்விக்கப்பட்டது