26 / மூட்டம்
☐சு.சமுத்திரம்
அமீரால், அதற்கு மேல் பேச முடியவில்லை. ‘அல்லா அல்லா’ என்று மட்டுமே அவர் வாய் அரற்றியது.
2
போர்க்குரலாய் ஒலித்த மின்சாரமணியின் ஒசை கேட்டு, உள்ளறைக்குள் இருந்த அபிராமி, புத்தகமும் கையுமாய், வளையல் சத்தத்துடன் கதவைத் திறந்தாள். எதிரே நின்றவர்களைப் பார்த்து அச்சப்படவில்லையானாலும், சிறிது அசந்துவிட்டாள். ஒருவரைப் பார்த்ததும் புன்முறுவலான வாய், எஞ்சிய மூவரைப் பார்த்ததும் தானாய் அடைபட்டது. கால்களோ அகலப்பட்டன. அவளது குடும்பத்துக்கு மிகவும் பழக்கமான சங்கரசுப்பு கூட அசத்தி விட்டார். சாதாரணமாய் பட்டும் படாமலும் திருநீறு பூசுபவர், அன்று பட்டை அடித்திருந்தார். ஒரு நாளும் இல்லாத சந்தனமும், அதன்மேல் சவாரி செய்த குங்குமமும் அவருக்குப் புதியவை.
என்றாலும், அந்த வித்தியாசத்தை, அபிராமி பெரிதாக எடுத்துக் கொள்ளாத வகையில் மீதி மூவரும் காட்சியளித்தார்கள். அவர்களில் ஒருவர் முப்பது; இன்னொருவன் பதினெட்டு வயதுப் பையன்; மூன்றாமவன் நாற்பது வயது நடுத்தரம். எல்லோரும் சொல்லி வைத்ததுபோல் கிட்டத்தட்ட ஒரே நிறம்... மண்சிவப்பு நிறம்... உச்சி முதல் பாதம் வரை கோணல் இல்லாத ஒரு செங்குத்தான கோட்டை வரையலாம் என்பது போன்ற உடல்வாகுக்காரர்கள். முழங்கால் வரை நீண்ட காக்கி டவுசர்கள். அவற்றை கவ்விக் கொண்டிருப்பது போன்ற வெள்ளைச் சட்டைகள். ஒவ்வொருத்தர் கையிலும் காக்கி நிறத்தாலான ஒரு குண்டாந்தடி.
அபிராமி, அவர்களின் ‘சண்டியர்த்தனமான’ பார்வைக்குச் சிறிது பயந்தவளாய், சங்கச்சுரப்பு மீது மட்டுமே பார்வையை நிலைநாட்டி, அவர்களை வரவேற்பது போல் ஒடுக்கிப் பிடித்த கதவை விசாலப்படுத்தினாள். எட்டு முழ