உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூட்டம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 / மூட்டம்

☐சு.சமுத்திரம்

இளக்காரமாக நினைக்கிறவங்க வந்ததாலதான் நமக்கு இந்த நிலைமை. வயசு வந்த பொண்ணை பட்டப்பகலில் தெருக்கடையில் நிற்கவைச்சு, அதுவும் கோஷா போடாமல் எல்லா கண்ணும் படும்படியாகச் செய்றவங்க ஜமாத்துல பேசறதுக்கு யோக்கியத கிடையாது.’

அமீர் இப்போது எழுந்து நின்றே பதிலளித்தார்.

‘நபிகள் நாயகத்தை யாரும் ஸல்னு ஒப்புக் கொள்ளாதபோது, அவரை முதல் முதலா அல்லாவின் தூதராய் ஏற்றுக் கொண்டது ஒரு பெண்தான் என்கிறதை மறந்திடாதீங்க. நபிகள் நாயகத்துக்கு அவரது துணைவியார் கதிஜா அம்மையார் எப்படித் துணை நின்னாங்களோ, அப்படி வறுமைப்பட்ட என் குடும்பத்திற்குத் துணையா நிப்பது என் மகள் பாத்திமா. அவள் எல்லார்கிட்டேயும் சகஜமாகப் பழகிறதை ஒரு இஸ்லாமியப் பெருமையா நினைக்கிறேன். ஊர்க்கண் படும்படியாக நடமாடப் படாதுன்னு, பெனாசீர் பூட்டோகிட்டே கேக்க முடியுமா? பங்களாதேஷில பேகம் கலீதாவிடமோ, முஜிபுர் ரஹ்மான் மகள் கிட்டேயோ கேட்க முடியுமா? அவ்வளவு ஏன்? ஆளுங்கட்சிப் பேச்சாளர் ஜீனத் இந்தப் பக்கம் கூட்டத்திலே பேசுறத்துக்கு வந்துட்டு டி.பி.யிலே தங்கியிருக்கும்போது, அவங்களுக்காக மணிக்ணைக்கிலே தவம் கிடந்து ஆப்பிள் கூடையையும் லெதர் பேக்கையும் வச்சுக்கிட்டு நானா காத்து நின்னேன்?’

திவான் முகமதுக்கு சுருக்கென்றது. அப்பாவுக்கு ஆதரவாகப் பேசப்போன சம்சுதீன் தோளை அழுத்தி, அந்த ஆதாரத்திலேயே பேராசிரியர் இதயத்துல்லா எழுந்தார். ஓய்வுபெற்ற தமிழ்ப்பேராசிரியர். லோக்கல் பட்டிமன்றங்களுக்கு நடுவர். மணிமேகலையிலும், தேவாரத்திலும் அதாரிட்டி. இப்போது அந்த ஜமாத்தையே இலக்கிய மன்றமாக மாற்றுவது போல் பேசினார்.

‘மாற்றம்... மாற்றம்... எங்கும் மாற்றம்... எதிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/72&oldid=1844447" இலிருந்து மீள்விக்கப்பட்டது