88 / மூட்டம்
☐சு.சமுத்திரம்
கைகளைப் பிடித்த துக்கி ‘அழாதிங்கம்மா’ என்றான். அப்போது காதர்பாட்சா ஒரு போடு போட்டான்.
‘முத்து! நான் ரெடிடா! இப்போ கடையைப் பாக்கணுங்குற பொறுப்புக்கூட இல்ல பாரு. அதனாலே நான் இப்போ முழு நேர சமூகத் தொண்டன்.’
‘ஏண்டா! உனக்கு மூளையிருக்கா? பழனிவேலுகிட்டே மோதுறதாய் இருந்தால், எல்லாக் கடைக்காரங்களையும் ஒன்னா திரட்டி மோதுன்னு சொன்னேன்- கேட்டியாடா... இப்பப்பாரு, அந்த ரவுடிப் பய செய்திருக்க காரியத்த.’
காதர்பாட்சா பேண்டில் இடதுபக்கப் பையில் வைத்த கைக்குட்டையை வலதுபக்கம் வைத்துக்கொண்டே கண்களைச் சிமிட்டிப் பேசினான்.
‘பழனிவேல் கடையை இடிக்கலடா! பஸ் ஸ்டாண்டு பிளாட்பார ராமன் கோயில் இடிப்பட்டதைத் தாங்காமல் பக்தகோடிகள் கடைக்குள் வந்து, துக்கத்தை தாங்கிக்க வளையல்களையும், ரிப்பனையும், பிளாஸ்டிக் சாமான்களையும் எடுத்துட்டுப் போயிட்டாங்க! எனக்கு ஒரு கண்ணு போனாலும் பழனிவேலுக்கு இரண்டு கண்ணும் போயிட்டது. எப்படின்னு கேக்க மாட்டியே? எங்கடையிலே, பிளாட் பாரத்துக் கோவில்லே இருந்து வீசிக்கடாசப்பட்ட ஸ்ரீராமரை பிரதிஷ்டை செய்திருக்காங்களாம். நானாவது பழனிவேலுக்கு ஐநூறு ரூபாய் வாடகை கொடுத்தேன். ஸ்ரீராமர் என்ன கொடுப்பார். பாவம் பழனிவேல்... சரி புறப்படலாமா?’
‘பாருப்பா, இவனுக்கு சூடு, சொரணை, ரோஷம் இருக்கான்னு கேளு!’
காதர்பாட்சா, அவை மூன்றும் இல்லாதது போல் சிரித்தான். அந்தச் சிரிப்பு முத்துக்குமாருக்கும் தொற்றிக் கொண்டது. அந்த தொற்றுச் சிரிப்போடு ஆயிஷாவைப்