பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அத்தியாயம் 12 முடிவுரை இக் குலோத்துங்கன் தளர்ச்சியுற்று ஒடுங்கியது முதலே துரதிருஷ்டங்கள் சோழ ஏகாதிபத்தியத்தைச் சூழ்ந்துகொண்டன. இந்த அசுபமான வேளையில், இவன் பின்னவனான மூன்றாம் இராஜராஜன் முடி சூடி னான். இவன் முன்னவற்கு என்ன முறையிற் பட்டம் பெற்றவன் என்பது தெளியப்படவில்லை. ஒருகால், தம்பியான சங்கர சோழராசனுக்கு இவன் மகன் போலும். ஏகாதிபத்தியத்தை நிர்வகித்துத் தாங்க வல்ல அறிவும் ஆற்றலும் இவ் விராசராசனுக்கிருந்தன அல்ல. முடிசூடிய இவனது பலவீன நிலைமையும், பெருவீரனாயிருந்தவன் வலிகுன்றி ஒடுங்கியதும், நெடுங் காலம் சோழரால் அடர்ப்புண்டு கிடந்த அரசர்களின் எழுச்சிக்கு ஏற்ற சந்தர்ப்பங்களை அளித்தன. வடக்கி லும் தெற்கிலுமிருந்த அவரெல்லாம் தங்கள் சக்திகளைப் பெருக்கிக்கொண்டு ஆயத்தமானார்கள். உள்நாட்டுச் சாமந்தர்களான நாட்டுத்தலைவர்கள் சிலரும் இராசத் துரோகிகளாகிச் சூழ்ச்சி செய்தனர். இந்நிலைமையில் பழிக்குப்பழி வாங்கக் காத்திருந்த பாண்டியன் தென் புறத்திலும், வடுகரசர் வடபுறத்திலும், காடவன் முதலிய சிற்றரசர் உள் நாட்டிலும் கலகமும் போரும் விளைக்கவே, சோழ சாம்ராஜ்யம் மூன்றாம் இராஜராஜன் கால முதல் நிலைகுலையத் தொடங்கியது. திரிபுவன