________________
கல் நாட்டியவனும், அவனுக்குக் கல்லும் கரண்டியும் கொத்தனைப்போல் எடுத்துக் கொடுத்த கான் சாகி பும் ஒரே மாதிரி செத்தார்களே என்று ஏங்குகிறது ஆங்கில எழுத்தாளனின் இருதயம்! ஒருவாறாக 1755-ஆம் ஆண்டு ஜனவரியோடு பிரஞ்சுப் போர் முடிந்து ஒப்பந்தம் ஏற்பட்டது. கருநாடகத்தில் ஆங்கிலேயர் கையே உயர்ந்தது. அப்பொழுது மேஜர் லாரென்ஸ் சென்னையில் இருந்த கும்பெனியின் ஆட்சிக் குழுவுக்கு ஒரு கடி தம் வரைந்தான். அதன் வாசகம் வருமாறு:"கனவான்களே, உங்கள் கவனத்துக்கு இன்னொரு வரையும் கொண்டுவர அனுமதி வேண்டுகிறேன். அவர் பெயர் முகம்மது யூசுப். அவர் நம் சிப்பாய் களின் தலைவர். அவருடைய கூர்த்த அறிவையும் திறமையையும் மட்டுமன்றி - ஊழியம் செய்வதில் அவருக்குள்ள ஊக்கத்தையும் விழிப்பையும் எவ் வளவு புகழ்ந்தாலும் தகும். எதையும் நான் சொல் லுவதற்கு முன் அவரே முன்வந்து செய்ய வேண்டி யதைச் செம்மையாகவும் விரைவாகவும் செய்து முடிக்கிறார். பயனுடைய அவ்வீரருக்குத் தாங்கள் ஒரு பாராட்டுக் கடிதமும் ஒரு சிறு பரிசும் அனுப் பினால், அவர் திறமைக்கு வெகுமதி அளிப்பது மட்டுமல்லாமல் அவருக்குப் பேருக்கத்தையும் அது தரும்." லாரன் சின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு உடனே தீர்மானமும் செய்தது கிழக்கிந்தியக் கும் பினி. அச் செய்தியை லாரன் சுக்கும் தெரிவித்தது.