பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 இந்நிகழ்ச்சிகளை அடுத்துக் கான்சாகிபு தென் பாண்டிப் பாளையங்களை அடக்கிக் கப்பம் வசூலிக்கு மாறு மறுபடியும் கும்பினி அரசாங்கத்தால் 1759ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டான். மதுரை திரு நெல்வேலி மாவட்டங்களுக்கு மறுமுறையும் சர்வாதி காரியான கான் சாகிபு செய்த முதல் வேலை மது ரைக்கு அருகில் இருந்த ஒரு பாளையக்காரனைக் கடுமையாகத் தாக்கி அவனையும் அவனுக்காகப் போரிட்ட ஐந்நூறு கள்ளர்களையும் ஒரே நாளில் தூக்கிலிட்டுக் கொன்றது தான். தன் பகைவர் நெஞ்சில் பெருந் திகிலை மூட்டக் கான்சாகிபு திட்ட மிட்டுச் செய்த பெருஞ்செயலே அது. வீரம் நிறைந்த கள்ளர்களை அடக்கி ஒடுக்கிய பின்? கான் சாகிபு சுதந்திர உள்ளம் கொண்ட பாளையக்காரர்களை அடக்குவதில் கண்ணுங் கருத்துமாய் ஈடுபட்டான். எழு நூறு சிப்பாய்களும் முந்நூறு குதிரை வீரர்க ளும் கொண்ட ஒரு பெரும் படையைக் கான் சாகிபு பூலித் தேவர் வசமாகியிருந்த பாளையங் கோட்டை யைக் கைப்பற்றவும், மேற்கத்திய பாளையக்காரரான பூலித் தேவருடன் எட்டயபுரம் பாஞ்சாலங் குறிச் சிப் பாளையக்காரர்கள் சேர்ந்து விடாதபடி பார்த் துக் கொள்ளவும் அனுப்பி வைத்தான். 1759-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி தானே 6400 சிப்பாய் களையும் 600 குதிரை வீரர்களையும் கொண்ட ஒரு பெரும்படையுடன் சுதந்திர வீரர்களை வாட்டி வதைக்கும் நோக்கத்துடன் ஏகாதிபத்தியக் கொடுங் கோலர்கள் சார்பில் புறப்பட்டான். முதலில், பூலித்தேவரும் வடகரைப் பாளையக்காரரும் கைப்