உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 மூன்றாம் குலோத்துங்க சோழன் பாட்டனார் விக்கிரம சோழரின் தௌகித்திரரான நெறி யுடைப் பெருமாள் என்பவருடைய மக்களே இப் பிள்ளைகள் ; இவர்கள் ஒன்றும் இரண்டுமான வயதுள்ள வராயிருந்தனர். இவர்களைத் தவிர, வேறு உரிமையான ஆண்வழிப் பிள்ளைகள் ஒருவருமே இல்லை. தன் பாட்ட னாரது பெண்வழி மக்களே னும் இவ்வாறு அரசாளக் கிடைத்ததற்கு மகிழ்ந்த இராஜராஜன் அவர்களைக் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து உடனே அழைப் பித்து, தான் அப்போது வசித்து வந்த தலைநகரான ஆயிரத்தளியில் தன் அந்தப்புர பரிவாரங்களுடன் அவர்கள் இனிது வாழ்ந்து வரும்படி ஏற்பாடு செய்தான். இது நிகழ்ந்த சில காலத்துக்குள் அரசனுக்கு நோய் முற்றிவிட்டது; இறுதிக்காலமும் நெருங்கியது. உடனே, தன் அறிவு கலங்குவதன் முன்பு அப் பிள்ளைகளுள் மூத்தவனான எதிரிலிப் பெருமாள் என்பவனை 'மண்டை கவிப்பித்து' 1 இளவரசனாக்கி, ஆக்கிய அன்றே இறந்துவிட்டான். அரசன் இறந்ததும் நாடு பெரிதும் கலக்கமடைந்தது. அரசுரிமைபற்றிச் சோழகுலத்தார்க்குள்ளும் அதிகாரி கள் சிலர்க்குள்ளும் குழப்பமும் சூழ்ச்சிகளும் பெருகின. இவற்றை யெல்லாம் அறிந்து, இறந்து போன அரச னுடைய அந்தரங்க மந்திரியும் அவனால் எல்லாச் சிறப் பும் பெற்று அரசாங்கத்தில் தலைமை வகித்து வந்த வருமான பெருமான் நம்பிப் பல்லவராயர் என்பவர், அரசுக்குரிய பிள்ளைகளும் அந்தப்புர பரிவாரங்களும் ஆயிரத்தளிப்படை வீட்டில் இருப்பது ஆபத்து என்று கருதி உடனே அவர்களை வெளியேற்றி இராஜராஜபுரத் 1 மண்டை என்பது - யுவராஜனாக்குவதற்குச் சூட்டும் ஒருவகை முடியாகத் தெரிகின்றது.