பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குலோத்துங்கன் ஆட்சித் தொடக்கம் 25 பெண் வழிக்கொட்பேரனும், நெறியுடைப் பெருமாள் என்ற சங்கமராஜனுடைய இளைய மகனுமாவான் என்ப தாகும். கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து அழைத்து வரப்பட்டது முதல், தலைநகரான ஆயிரத்தளி அரண் மனையில் இக் குலோத்துங்கன் ' அழகாண்மை யெல்லாம் கண்டார் கொண்டாட' இளஞ்சிங்கம் போல் வளர்ந்துவந் தான். தமையனான இராஜாதிராஜனுக்கு இக் குலோத் துங்கன் ஒரு வயசு இளையவன். அதனால், நாலு வயதில் பட்டம் பெற்ற தன் தமையனுடன் கூட இருந்து, அர சாங்க காரியங்களில் நன்கு மேற்பழகவும், கல்வித் துறைகளில் தேர்ச்சி யடையவும், வீரப்பயிற்சிகள் பெற வும் வேண்டிய அவகாசம் இவனுக்கு அமைந்திருந்தது. அறிவில் முதிர்ந்த புலவர்களின் கூட்டுறவு இளமையிலே அமைந்தமையால், இக் குலோத்துங்கனுக்குக் கலைச் செல்வத்துடன் செவிச்செல்வமும் நிரம்பியது. இக் குலோத்துங்கன் முடிசூடிய காலத்தில், சோழ சாமராஜ்யம் மேதாவிகளான மந்திரிகளால் திறமை யுடன் நிர்வகிக்கப்பட்டு வந்தபோதிலும், இவன் முன் னோனான முதற் குலோத்துங்கன் ஆட்சியில் இருந்த நிலைமை சிறுகச் சிறுகக் குறைந்து வந்தது. இதற்குக் காரணம், சிற்றரசர்களும் படைத்தலைவர்களும், சிறிய வும் பெரியவுமான தங்கள் பிரதேசங்களிலே தனிப் பட்ட அதிகாரங்களை நாட்டிக்கொண்டு சுயேச்சை பெற்று வந்ததேயாம். இந்த நிலைமை, இவன் தமைய னது இளமையாட்சியில் அதிகமாயிற்று என்றும் சொல்ல லாம். இதனுடன், இலங்கை அரசனான பராக்கிரம பாகு, சோழ அமைச்சர்கள் இருவராலும் தான் போரில் அடைந்த பரிபவங்களால் விரோத மிக்கவனாய், கலகம் செய்து வந்த பாண்டியருள் ஒருவன் கட்சியைச் சார்ந்து