________________
கலை வளர்ச்சி 45 கவியொருவர், சாஸன மூலம் நமக்குத் தெரியவருகின்றார். இவர் பெயர், வீராந்தப் பல்லவராயர் என்பது. நம் குலோத்துங்கன், 23-ஆவது ஆட்சி வருஷத்தில் தன் வாயிற்புலவரான இப்புலவர் கேட்டுக்கொண்டபடி, 'கலாவிநோத நிருத்தப் பேரரையன் பாரசவன் பொன்னன்' என்பானுக்கு, அவ்வூர்ச் சிவாலயத்தில் நட்டுவ நிலை என்ற விருத்தி நடத்தும்படி ஆணை யளித்தான் என்று திருக்கடவூர்க் கல்வெட்டுக் கூறு கின்றது. ஆலயங்களிலும் அரசரது ஓலக்கங்களிலும் நிருத்தமாடி மகிழ்விப்போர், பெண் பாலார் மட்டுமன்றி ஆண்மக்களும் பலர் இருந்தனர். இவர்கள் எல்லாரும் நாட்டிய சாஸ்திரத்திலும் அலங்கார நூல்களிலும் தக்க பயிற்சி வாய்ந்தவர்கள். இச்செய்தி பின்பு விவரிக்கப்படும். ஆஸ்தான கவியான இவ்வீராந்தப் பல்லவராயரால் அபிமானிக்கப்பட்ட நிருத்தப் பேரரை யனும் இத்தகைய கலைகளில் வல்லவனாயிருந்தமை பற்றியே, இப்புலவரும் அரசனும் அக்கூத்தனை ஆதரித்தனர் என்று சொல்லலாம். மேற்கூறிய குலோத்துங்கன் கோவையில், பாட்டுடைத் தலைவனான நம் சோழனது குணஞ்செயல்களும் அறிவாற்றல்களும் பலபடப் பாராட்டிக் கூறப்பட்டிருப்பதை நோக்கும் போது, அவனது அன்பிற்குரியவராகச் சாஸனங்கள் கூறிய இவ்வீராந்தப் பல்லவராயர்போன்ற ஆஸ்தான கவியினால், அக்கோவை இயற்றப்பட்டிருக்குமோ என ஐயம் நிகழ்கின்றது. 3. சங்கரசோழனுலா ஆசிரியர் சங்கரசோழனுலாவின் ஆசிரியரும் நம் சோழன் காலத்தில் வாழ்ந்திருந்தவரே. இவர் பெயரும் இன்ன