உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கலை வளர்ச்சி 47 தெரியவந்தன. இரண்டாம் இராஜராஜனுக்குப் பின்பு ஆண்டவர்களாக இவ்வுலாப்புலவர் குறிப்பிட்ட சகோதரர் மூவர்களிலே, குமாரமகீதரன் அல்லது குமார-குலோத்துங்கன் என்ற நம் சோழனை வீரப் பெருமையாற் பெரிதும் புகழ்கின்றார் இப்புலவர். இதனால், நம் சோழனது வெற்றிச் செயல்களை நேரில் அறிந்தவர் இவ்வுலாவாசிரியர் என்றே சொல்லலாம். 4. கம்பநாடர் நம் சோழனால் ஆதரிக்கப்பெற்று அவனது அவையை அலங்கரித்த பெரும்புலவர்களிலே, கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பநாடரும் சேர்ந்தவராயிருத் தல், இங்கே சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இப்புலவர் பெருமான் தம் பெருங்காவியத்திலே, "புவி புகழ் சென்னிபோ ரமலன் தோள் புகழ் கவிகள் தம் மனையெனக் கனகராசியும்' (கம்பரா. கிட். பிலநீங்கு. 53.) "சென்னிநாள் தெரியல் வீரன் தியாக வினோதன் தெய்வப் பொன்னி நாடு (டையுத். மருத்து, 358) என இரண்டிடங்களில் புகழப்பட்ட சோழவேந்தன் நம் குலோத்துங்கனேயாவன். திரிபுவன வீரன், வீரராஜேந் திரன் என்பவை இச்சோழன் தரித்த பிரபல நாமங்க ளாதலால், வீரன்' - போரமலன்' என்றும், இவ்விசே டணம் இவன் முன்னோர் சிலர்க்கும் சொல்லக்கூடிய தாத லால், இவ்வரசனுக்கே உரிய சிறப்புப் பெயரால் தியாக விநோதன் என்றும் குறிப்பிடலாயினர் கம்பநாடர். தியாகவிநோதன் என்ற பெயர் நம் சோழனுக்கே உரிய