உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மூன்றாம் குலோத்துங்க சோழன் அத்தியாயம் 1 தமிழகமும் சோழரும் நம் பாரத தேசத்தில், வடக்கில் வேங்கடமும் தெற்கில் குமரியும் கிழக்கிலும் மேற்கிலும் கடல்களும் எல்லைகளாகவுடைய தென்கோடிப் பகுதியில் தமிழ் மொழி வழங்குகின்றது. அதனால், இதனைத் ' தமிழ் கூறும் நல்லுலகம்,' 'தமிழகம்' என்று முன்னோர் வழங் கினர். இந் நிலப்பகுதிக்கு வடக்கே பெரும்பாலும் வடமொழி பயின்று வந்தமையால், அதினின்றும் வேறு பாடு அறிய, இந்நிலத்துமொழி தென்மொழி என்று வழங்கப்பட்டது. இத் தமிழகத்தை அநாதிகாலமாக ஆண்டு வந்த அரசர்கள் சேரர், சோழர், பாண்டியர் என்னுமூவராவர். இம்மூவருடைய ஆட்சிக்கு உட்பட்ட தேசங்கள், தலைகீழான ஆய்தவெழுத்தின் வடிவில் (0) மூன்று மண்டலங்களாய்ச் சேரநாடு, சோணாடு, பாண்டி நாடு என வழங்கின. இவற்றை முறையே குடபுலம், குணபுலம், தென்புலம் என்று கூறுவது பண்டை வழக்கு. சேரநாடு மேல்நாடான தால் குடபுலம் என்றும், சோழநாடு அதற்குக் கிழக்கே உள்ளமையால் குணபுலம் என்றும், அவ்விரண்டுக்கும் தெற்கில் அமைக்