________________
68 மூன்றாம் குலோத்துங்க சோழன் தெலுங்குச் சோடர் :- இவர்கள் தெலுங்கு நாட்டின் வட பகுதிகளிலும், நெல்லூர் கடப்பை சித்தூர் வடதென்னார்க்காடு ஜில்லாக்களிலும் நம் சோழன் காலத்துக்கு முன்பே ஆதிக்கம் பெற்றி ருந்தவர்கள். இச்சோடர், தங்களைச் சூரிய குலத்தவர் என்றும், கரிகாற்சோழன் வழியினர் என்றும், காசிய கோத்திரத்தவர் என்றும் கூறிக்கொள்வர். நம் குலோத் துங்கன் ஆட்சித் தொடக்கத்தில், இவர்களுட் சிலர் இவனுக்குப் பகைவராயினர். ஆயினும், இவ்வரசனது கச்சிப் படை யெடுப்பின் பின்னர், இவர்கள் அடங்கி இவனது ஆணையை ஏற்றுக்கொண்டதோடு, தக்க சமயங்களில் உதவி புரிந்தும் வந்திருக்கின்றனர். இத் தெலுங்குச் சோடருள், மதுராந்தக பொத்தப்பிச் சோழன் என்னும் பெயர் நம் சோழன் காலத்துச் சாஸனங்களில் அடிக்கடி பயில்கின்றது. பொத்தப்பி என்பது கடப்பை ஜில்லாவில் உள்ள தாகும். இந் நகரையும் நெல்லூரையும் தலைமை யிடங்களாகக் கொண்டு ஆண்டவர்களுள், 12-ஆம் ஆண்டில் மதுராந்தக பொத்தப்பிச் சோழன் என்பானும், 19-ஆம் ஆண்டில் நல்ல சித்தரசரும், 26-ஆம் ஆண்டில் மேற்படி சோடன் மகனான சித்தரசனும், 36-ஆம் ஆண்டில் சோடன் திருக்காளத்தி தேவன் என்பானும் சிறந்தவர் களாகக் கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றனர். இவ ரெல்லாரும் நம் வேந்தர் பெருமானது ஏகாதி பத்தியத்துக்கு நல்லுதவி புரிந்த மண்டலிகர் ஆவர். இவரன்றி, சளுக்கிய வமிசத்தவருள், சசிகுலச்சளுக்கி தனி நின்று வென்ற வீரநரசிங்க தேவயாதவராயர் என்பாரும் நம் வேந்தனது ஆணையை யேற்றுவந்த அரசருள் ஒருவர் என்று அறியப்படுகின்றார்.