பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

93 குணாதிசயங்கள் களும், நாணயங்களின் செலாவணியும், ஆலயங்கள் முதலிய அறப்புறங்களின் பரிபாலன முறைகளும் ஜாதி தர்மங்களின் வியவஸ்தையும், வியாபாரிகளின் கூட்ட ஒழுங்கும், நாட்டு மக்களின் வழக்கங்களுக்கேற்ப வழங்கி வந்தன. இவையாவும் பெரும்பாலும் முன்னோரான சோழமன்னர் மேற்கொண்ட முறைகளென்றே சொல்ல லாம். இவற்றையெல்லாம் இங்கு விரிப்பின் இவ்வதிகாரம் அளவு கடந்துவிடும். ஆதலால், இவைகளை விடுத்து, நம் சோழன்காலத்து அரசியற் செய்திகளாக அறியப் பட்டவற்றைமட்டும் இங்கே குறிப்பிட்டோம். அத்தியாயம் 11 குணாதிசயங்கள் இதுவரையில் கூறிவந்த செய்திகளால் மூன்றாம் குலோத்துங்கனது வாழ்க்கை வரலாறுகளைத் தொடர்ச் சியாக நாம் ஒருவாறு அறிந்துகொள்ள இயலும். இவ் வேந்தன் முதற்குலோத்துங்க சோழனுக்குப்பின்பு, தௌ கித்திர பரம்பரையில் வந்தவனாதலால், சோழகுலத் துப் பேரரசர்களின் வீர ரத்தம் இவன் நரம்புகளிலும் ததும்பி யோடுவதாயிற்று. இரண்டாம் இராஜராஜன் தன் வமிசவிருத்திக்காகக் கங்கை கொண்ட சோழ புரத்திலிருந்து கொணர்வித்த சிறுவர்கள் இருவருள், இவன் ஒருவன் என்று முன்பே அறிந்தோம். அவ்வாறு தருவிக்கப்பட்டது முதலே ஆயிரத்தளி யரண்மனையில் வளர்ந்து, தக்க அமைச்சர்களாலும் அறிஞர்களாலும் இவன் சிட்சைசெய்யப்பெற்று வந்தவன். அதனால், இராஜ்ய நிர்வாகத்துக்கு வேண்டிய அறிவாற்றல் களெல்லாம் இவனிடம் தாமாகவே நிரம்பலாயின. நிரம்பியிருந்த நிலையில், இவன் தமையன் ஆட்சியும்