பக்கம்:மூன்றாம் நந்திவர்மன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்றாம் நந்திவர்மன்

நந்திவர்மன் வரலாறு


தெள்ளாறெறிந்த நந்திவர்மன் பல்லவ இராச்சியத்தை ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டு அரசாண்டான். இவன் அரசாண்ட காலம் கி. பி. 847 முதல் 872 வரையில் என்பர். தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் புகழ்வாய்ந்த இந்த அரசன், பல்லவ அரசர் பரம்பரையில், நந்தி என்னும் பெயர்பெற்ற அரசர்களில் மூன்றாவன். ஆகவே இவனை மூன்றாம் நந்திவர்மன் என்று கூறுவர்.

பெற்றோர்

இவனுடைய தந்தையின் பெயர் தந்திவர்மன் என்பது. நந்திவர்மன் மனைவி, கடம்ப அரசர் குலத்தில் பிறந்தவளான அக்களதிம்மதி என்பவள். இவர்களுக்கு மகனாகப் பிறந்தவன் நந்திவர்மன் மூன்றாவன். இவன் அரசாட்சிக்கு வந்தவுடன்