பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் & 110 விளையாட முடியாத வெந்தழற் பந்துநீ! பூமிக்கும் விண்ணுக்கும் பொதுச்செயலாளன்நீ! கமலச் செல்வியின் காதற் கொழுநன்நீ! காலச் செல்வனின் கணக்குப் பிள்ளைநீ! இப்படி இசைத்துநான் இருக்கையில் இருண்டமுகில்போல் நீண்ட கூந்தலும் நெளியும் மின்னல்" இடையும் விற்’புருவமும் எழில் நிலா" முகமும் பன்மீன்' செய்யும் பால்வெண்ண கையும் படைத்தஎன் காதற் பத்தினி வந்து கதிர்ஒளிக் கண்ணாற் காந்தம் செய்து பார்த்தாள், 'தனியாய்ப் பார்த்து மகிழ்தல் என்னவோ அத்தான்? இயம்பக' என்றாள். அப்போது, மாலை யழகில் மயங்கி யிருந்தநான் "பார்சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில் எத்தனை தீப்பட் டெரிவன் ஒகோ என்னடி, இந்த வண்ணத் தியல்புகள்! எத்தனை வடிவம் எத்தனை கலவை! தீயின் குழம்புகள் செழும்பொன் காய்ச்சி விட்ட ஓடைகள் - வெம்மை தோன்றாமே! எரிந்திடும் தங்கத் தீவுகள்! பாரடீ! நீலப் பொய்கைகள் அடடா - நீல வண்ணமொன்றில் எத்தனை வகையடீ!

  • 1 - 5 முகில். மின்னல், வில், நிலா. மீன் - இவை பிற

கவிஞாகளால் பாடப்பட்ட கவித் தலைப்புகள்.