பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் S. A "காதுக்குக் கைக்கதவா போடுகின்றோம்,' "புதிதாய் வரும் படத்தைப் போய்ப் பார்க்க வழியுண்டா.' "ஏட்டில் எழுதாமல் இதயத்தில் எழுதிவைத்த நாட்டுப் பாடல்,' 'கண்ணன் காலத்தில் ஒரு கார் ஏது" "ஈக்கடியும் கொசுக்கடியும் இருந்தாலும் தெரியாத தேக்கடியும்.....' 'நிலமங்கைக்கு நெற்றியின் முத்தை வழங்கி வழங்கி வள்ளல் ஆகிறான்' என்று அவர் பாடியுள்ள இடங்களில் உயிர்த் துடிப்புக் காண்கிறேன். 'அருகிருந்து கூந்தலினைக் கோது வார்கள் அது கருப்பே என்பதனால் மாறி, வெள்ளை உருவெடுத்து விடுமானால் பின்னர்த் தேடி ஒருபயல்தான் வருவானா?” போன்ற இடங்கள் உலகியலைக் காட்டுவன. பழங்கதைகள் பேசுவதைக் காட்டிலும் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கவேண்டும் என்னும் இக்கவிஞரின் குறிக்கோள் போற்றுதற்குரியது. அவர் வெற்றியுறுக. மதுரை 30.5.8.I அ. சிதம்பரநாதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/6&oldid=883093" இலிருந்து மீள்விக்கப்பட்டது