பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 67 எண்களுக்குள் மூன்றுக்கே எழுத்துக்க ளும்மூன்றாம்! எண்களுள் வேறெதுவும் அந்த எழுத்தால் அமைவதுண்டா? அகர வரிசையினை அறிவீர்கள் அவ்வரிசைச் சிகரமென விளங்கித் திகழ் ஆய்த எழுத்துக்குப் புள்ளிகளும் மூன்றாகும்! பூமிக்(கு) அறிவமுதம் அள்ளி வழங்கியுள்ள அக்காலத் தமிழர்களின் உள்ளம் கவர்ந்த ஒருசொல்லே மூன்றாகும்! வள்ளுவனார் தந்திருக்கும் வாழ்க்கை விளக்கநூல் மூன்றெழுத்தில் உள்ள முறையெண்ணிப் பாருங்கள் மூன்றுபா லாய்க்குறள் முகிழ்த்ததையும் பாருங்கள்! தங்கக் குணங்கொண்ட தமிழ் நாட்டார் முன்புகண்ட சங்கங்கள் மூன்றாகும் சங்கங்கள் மூன்று கண்டோர் பச்சைக் குழந்தைக்குப் பாலூட்டும் சங்கொன்று, நிச்சயித்த மணநாளில் நிகழ்த்தும் இசைச் சங்கொன்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/68&oldid=883110" இலிருந்து மீள்விக்கப்பட்டது