பக்கம்:மூன்று தலைமுறை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று தலைமுறை 19

யொழிய, அவசரக் குடுக்கையாக இருக்கக் கூடாதல்லவா? அதைத்தான் சொல்ல வந்தேன்.” - குட்டிச் சுவர் மறுபடியும் விட்ட கதையைத் தொடர்ந்து சொல்லத் தொடங்கியது. -

密 蜂 谍

கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. அஞ்சு நாட்கள் ஊரே திமிலோகப்பட்டது. எங்கெங்கே இருந்தோ மேளகாரர்கள் வந்திருந்தார்கள். பாட்டுக் கச்சேரிகள் வேறு. தினமும் வாண வேடிக்கை.

கல்யாணத்தில் துரையவர்கள் வேலைக்காரர்களுக் கெல்லாம் இனம் கொடுத்தார். எ.காம்பரத்துக்கும் முருகாயிக்கும் வேட்டியும் சேலேயும் இனம் கிடைத்தன. முருகாயி அந்தச் சேலேயைக் கட்டிக் கொண்டு பூரித்தாள். அவள் அழகைப் பார்த்து ஏகாம்பரம் சொக்கிப் போனன்.

கமலம்மா அரண்மனேக்கு வந்த பிற்பாடு ஜமீன் தாரின் ஆடைகளோடு அந்த அம்மாவுடைய துணிகளும் ஏகாம்பரத்தின் வீட்டுக்குச் சலவைக்கு வந்தன, அவ ளுடைய புடைவைகளேயும் ரவிக்கைகளேயும் முருகாயி பார்த்தாள். முருகாயி ஆடம்பர மோகம் உடையவ ளென்று முன்னலே சொல்லியிருக்கிறேன். அவளுக்கு ஒரு பைத்தியக்கார ஆசை பிடித்துக்கொண்டது. ஜமீன் தாரிணியின் ஆடைகளேக் கண்டபோது அந்த மாதிரி சேலைகளேயும் ரவிக்கைகளையும் தானும் அணிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று. அது கடக்கிற காரியமா ? - .

ஜமீன்தாரிணியின் சேலே முதலியவை ஏகாம்பரத்

தின் வீட்டிற்கு வருகின்றன அல்லவா? அந்தச் சமயத்தில் அவற்றைக் கட்டிப் பார்க்கவேண்டும் என்ற விருப்பம் அவளுக்கு ஏற்பட்டது. அரண்மனேயிலிருந்து வரும் சேலேயையும் ரவிக்கையையும் ஒரு தடவை, ஒரு ராத்திரி, யாவது உடுத்துக் கொண்டிராவிட்டால் அவளுக்கு ஆசை திராது. அப்படி ஒரு கெட்ட பழக்கத்தைப் பண்ணிவிட் டாள். முதலில் ஏகாம்பரம் அப்படிச் செய்யவேண்டா மென்று சொன்னன். ஆனலும், அவள் அப்படி உடுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/24&oldid=620425" இலிருந்து மீள்விக்கப்பட்டது