பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. இடைவெளிகள் SPACES எழுதும் போது சொற்களுக்கிடையே நாம் இடைவெளி விட்டு எழுதுகிறோம். இடைவெளி விடாமல் எழுதினால் படிப்பது இடர்ப்பாடாயிருக்கும். அதுபோலவே அச்சுக் கோக்கும் போதும் சொற்களுக்கிடையே இடைவெளி விடுதல் வேண்டும். இவ்வாறு இடைவெளி விடுவதற்குப் பயன்படும் அச்சுக்களை இடைவெளி (Space) என்றே நாம் அழைக்கிறோம். இடைவெளிகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளும் போது எம் (Em) என்ற அளவைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். பனிரண்டு புள்ளி அகலமும் பனிரண்டு புள்ளி நீளமும் கொண்ட ஒரு சதுர இடைவெளி அளவே எம் (Em) என்று குறிக்கப்படுகிறது. இது போன்ற இரண்டு சதுர இடைவெளி அளவுகள் இரண்டு எம் என்றும், மூன்று சதுர இடைவெளிகள் மூன்று எம் என்றும் இப்படியே எம் கணக்கில் இடைவெளிகள் குறிக்கப்படும். ஒரு எம்மில் பாதி அரை எம் ஆகும். அரை எம்மின் அளவு பனிரண்டு புள்ளி நீளமும் ஆறு புள்ளி அகலமும் ஆகும்.