பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. எழுத்துக் கோத்தல் COMPOSING எழுத்துக்களைக் கொண்டுள்ள பெட்டிக்கு அச்சுப் பெட்டி (Type Case) என்று கூறுகிறோம். இந்த அச்சுப் பெட்டி ஒரு தாங்கியின் (Stand) மீது வைக்கப் பட்டிருக்கும். இந்த அச்சுப் பெட்டி மேல் தட்டு கீழ்தட்டு என இரண்டு பகுதிகளாக உள்ளது. இதில் வெவ்வேறு அளவுகளில் குழிகள் அமைந்துள்ளன. இந்தக் குழிகளில் எழுத்துக்கள் போடப் பட்டுள்ளன. இந்தக் குழிகளில் எழுத்துக்கள் அகரவரிசை யாகப் போடப் படுவதில்லை. வரிசை மாறியுள்ளன. ஏன் மாறியுள்ளன எனில் தொடக்கத்தில் அச்சுப் பெட்டிகளில் எழுத்தைப் போட்டவர்கள், நீண்ட நாட் பயிற்சியின் பயனாக ஆய்ந்து, மிகுதியாகப் பயன்படும் எழுத்துக்களை அருகிலும், அருகிப் பயன்படும் எழுத்துக்களைச் சிறிது தொலைவிலும், மிக மிக அருகிப் பயன்படும் எழுத்துக்களை உச்சியிலும் அமைத்துள்ளனர். இந்த அமைப்பு முறை மிக எளிதாகவும், விரைவாகவும் அச்சுக் கோப்பதற்குத் துணை யாய் உள்ளது. ஆனால் மாறி மாறியுள்ள இந்த எழுத்துக் களைக் கோப்பதற்கு சிறிது நீண்ட பயிற்சி தேவைப்படு கிறது. நல்ல பயிற்சி பெற்று விட்டால், மிக விரைவாக எழுத்துக்களைக் கோப்பது எளிதாகி விடுகிறது. எழுத்துக்களைக் கோக்கப் பழகுமுன் ஒரு வாரத்திற்கு ஒவ்வொரு குழியிலும் உள்ள எழுத்துக்களை எடுத்துப்