பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

ஆகியவற்றிற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒவ்வோர் இடத்திலும் நடுவில் அச்சொற்களை அமைத்து மிகுந்த இடங்களில் வெளிக் கட்டைகளைப் போடவேண்டும். இந்தச் சொற்களுக்கு மேலுங்கீழும் அரை எம் சக்கைபோட்டு தடித்த கோட்டினைப் போடுதல் வேண்டும். சொற்களுக்கு ஒதுக்கப் பட்ட இடக்கணக்கின்படி கீழேயும் கோடுகள் நீட்டிவிட வேண்டும். பட்டியலின் மொத்த உயரம் 40எம் அளவில் நிறுவனப் பெயர், முகவரி, வாடிக்கையாளர் பெயர் எழுத விட்ட இடம், தலைப்பு இவற்றிற்கெல்லாம் பனிரண்டு எம் ஆகியிருக்கும். மேற்படி இடம்போக மீதியுள்ள 28எம் உயரததிற்கு ஒவ்வொரு பத்திக்கும் உரிய கோடுகளை அமைத்து அவற்றிற்கு நடுவில் ஒதுக்கப்பட்ட கணக்குப்படி வெளிக் கட்டங்களை நிறைக்கவேண்டும். அடியில் ஒரு தடிக்கோடு போடவேண்டும் குறுக்குக் கோடுகள் மேலேயுள்ள இரட்டைக் கோடுகளில் கீழ்க்கோட்டையும், அடியில் பட்டியல் முடிவில் உள்ள கோட்டையும் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இப்போது நூலினால், இப்பட்டியல் அமைப்பைக் கட்டி வைத்து, மெய்ப்பு எடுக்கவேண்டும்.

பிழைகள் இருந்தால் திருத்தி விட்டு, அமைப்பில் தேவைப்பட்டால் மாறுதல் அமைத்துக் கொண்டு, அச்சிட படிவச் சட்டத்தில் முடுக்கிக் கொள்ள வேண்டும்.

பட்டியல் புத்தகம் பக்கம் 60ல் கண்ட மாதிரி அமைந் திருக்கும்.

மாதிரிக்கு ஒன்று என்ற முறையில் பட்டியல் புத்தகம் பற்றிய விளக்கம் மேலே கொடுக்கப்பட்டது. இதுபோல் பல வேலைகளையும், அறிவுத் திறத்தாலும், கற்பனைத் திறத் தாலும் அளந்து செய்தல் சிறப்பைத் தரும்.