பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

இழைத்துவிடும். மேலும் உள்ள உருளைகளும், மைத்தட்டில் மையை இழைத்துக் கொடுப்பதுடன், அச்சிட வேண்டிய கோப்புப் பொருளின் மீதும் தடவி விடும். அச்சுப்பொறியின் இருபுறத் தட்டுகளும் இணையும்போது மை தாளில் பட்டு அச்சாகிவிடும்.

முதலில் அச்சிட வேண்டிய கோப்புப் பொருளை படிவச் சட்டத்தில் முடுக்கிக் கொள்ள வேண்டும்.

இரண்டவதாகப் படுக்கை தயாரித்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக, மைத்தட்டில் மை தடவி இழைத்துக் கொள்ள வேண்டும்.

நான்காவதாக படிவச் சட்டத்தை அச்சுப் பொறியில் முடுக்கிக் கொள்ள வேண்டும்.

படுக்கைத் தாள்களைச் சுருக்கமின்றிப் படிய விட்டு, பகரச் சட்டங்களை அழுத்திய பின், ஒரு முறை உருளையைச் சுற்றி, படுக்கைத் தாளில் அச்சுப் படியும்படி செய்ய வேண்டும். படிந்த அச்சுப்பகுதி அச்சிட வேண்டிய தாளின் நடு மையத்தில் அச்சாகும்படி, வைத்து தாளின் தலைப் பக்கத்திலும் இடது பக்கத்திலும் குண்டூசி குத்த வேண்டும்.

தலைப்புறத்தில் இரண்டு குண்டூசிகளும், இடப்பக்கத்தில் ஒரு குண்டூசியும் குத்த வேண்டும். குண்டூசிகளை வலப்புறம் சாய்த்தபடி குத்த வேண்டும்.

அச்சிட்ட தாளை எடுத்து மை எங்கும் சமமாகப் படிந்துள்ளதா என்று பார்க்க வேண்டும்.

தாளில் ஓர வெளிகள் (Margins) நாற்புறமும் தேவையான அளவு (பெரும்பாலும் சமமாக) அமைந்துள்ளனவா என்று பார்க்க வேண்டும்.

அ-5