பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 நா. பார்த்தசாரதி

விதத்தில் பல காரியங்களை அடுத்தடுத்துச் செய்யும் வாயபபு அவாகளுககு ஏறபட்டது.

1962-இல் சீன ஆக்ரமிப்பின் போது அவர்கள் இயக்கம் மிகவும் பொறுப்புடன் நடந்து கொண்டது. கை விட வேண்டும் என்று சிலர் வற்புறுத்திய பிரிவினைக் கோரிக்கையைக் கைவிடவும் இதுதான் தருணம் என்று தோன்றியது. அந்நிய ஆக்ரமிப்பிற்கு எதிராக நேரு பெரு மகனாரின் கரத்தைப் பல்ப்படுத்த வேண்டுமென்று இயக் கத் தலைமை விடுத்த பெருந்தன்மையான அறிக்கை

மக்களை மிகவும் கவ்ர்ந்தது. -

அந்த இயக்கத்துக்குப் பக்குவமும் விவேகமும் இருப் பதை 'மேலும் நிரூபிப்பது ப்ோல் மற்றொரு காரியமும் நிகழ்ந்தது. பிரிவின்னத் தடைச் சட்டத்தின் கீழ் இயக்கமே நசுங்கி அழியும்படி விட்டுவிடுவதா ஆல்லது பிரிவினைக் கோரிக்கையைத் தியாகம் செய்து விட்டு இயக்கத்தை மட்டும் வளர்ப்பதா என்று - முடிவுசெய்ய வேண்டிய தருணம் வந்தபோது _சமயோசிதமாகப் பிரிவின்ைக் கோரிக்கையைக் கைவிடுவதாக இயக்கத் தலைமை அறிவித்தது. கண்ணிர்த்துளிகள் பதவி ஆசைக்காகத் திராவிட நாடு கொள்கையைக் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள்-' என்று கிண்டல் செய்தவர்களை அவர்கள் பொருட்படுத்தவில்லை. திருமலையோ அண்ணனின் தீர்க்கதரிசன்த்தையும், அரசியில் தொலை நோக்கையும் வியந்தான். தன் போன்றவர்களையும் இயக்கத்தையும் கட்டிக் காத்த இதய தெய்வத்துக்கு நன்றி கூறினார்கள் அவர்கள். திருமலையைப் போன்று அண்ணனுக்கு ஒரிரு ஆண்டுகள் இளமையாக இருந்த மூத்த தலைவர்கள் கூடப் பிரிவினைக் கோரிக்கைன்யக் கைவிட்டது பெரிய ராஜ தந்திரம் என்று கருதினார்கள் சீன ஆக்ர்மிப்பின் போது நேரு பெருமகனார்க்கு அளித்த ஆதரவின் மூலம் இயக்கம் 'சிறுபிள்ளைத்தனமானது இல்லை.பொறுப்புள்ளது என்ற நம்பிக்கை வந்திருந்தது. அவனைப்போல் நர்டகம் திரைப் படம், என்று இய்க்கத்தில் வேறு கலைகள் மூலம் பயன டிைந்து வந்தவர்களை ஒடுக்க வேலூர் ம்காநாட்டில் அதை ஒரு பிரச்னையாக்க முயன்றவர்களை அண்ண்ர்ன்