பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 நா. பார்த்தசாரதி லேன்னு அர்த்தம். அவங்க ஏற்கெனவே வேறெந்தக் கட்சியிலாவது இருந்தாத்தான் நமக்குச் சங்கடம் ஒரு கட்சியிலேயும் இல்லேங்கறது நமக்குப் பெரிய வசதி. சுல பமாகக் கசியத்தை முடிச்சிடலாம்' என்று கன்னையா வைக் கண் டித்து விட்டுப் பிடிவாதமாக மேலே சென்றான் திருமலை. பையன் குண்டடி பட்டுச் செத்தது பற்றிய அநுதாபமும், வேதனையும் எல்லாரிடமும் தெரிந்தன. ஆண்ால் அது. த்றி அரசியல் ரீதியான பிரக்ஞை யாரிட மும்ே இல்லை. குடும்பக் கட்டுப்பாட்டுத் துறை கொடுத்த ப ைஉதவிக்கு ஆசைப்பட்டுப் பையனின் தத்தை சில நாட்களுக்கு முன் புதான் வாலெக்டமி செய்து கொண்ட விவரத்தையும் சிலர் சொல்லிப் பரிதாபப்பட்டார்கள். யாரோ பண்ணிய கலகத்தில் ஒரு பாவமும் அறியாத டச்சிளம் பாலகன் ஒருவன் பலியாகிவிட்டானே என்ற பச்சாதாபம்தான் எல்லாத் தரப்பிலும் நிரம்பியிருந்தது. "பொல்லாத இந்தியை எதிர்த்துப் புதிய புறநானூறு படைத்து விட்டான் ஒரு பைந்தமிழ்ச் சிறுவன்' என்பது போல் எதுவும் இல்லை. திருமலையும் அவனைச் சேர்ந்த வர்களும் ஏடுகளும் அப்படி ஒரு பிரசாரத்தைச் செய்திருந் தாங்களே ஒழிய உண்மை இப்படிக் கசப்பானதாக மட்டும்ே இருந்தது. கன்னையா எவ்வளவோ தடுத்தும் திருமலை கேட்கவில்லை. அந்தக் குடிசைக்குள் அவர்கள் நுழைந்த போதே கொந்தளிப்பாக இருந்தது. திருமலை கையில் இருபது நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து வைத்துக் கொண்டு ஏதோ சொல்ல ஆரம்பித்தான். அழுது அழுது முகம் வீங்கித் தலைவி கோலமாய் இருந்த சிறுவனின் தாய் ஹிஸ்டீரியா வந்தவள்போல் கத்தியபடியே பாவிகளா என் செல்வத்தைக் கொன்னுப்புட்டீங்களே என்று கட்டை விளக்குமாற்றை எடுத்துகொண்டு அவர்கள் மேல் பாய்ந்து விட்டாள். புயனின் தந்தை வெட்டரிவாளை எடுத்துக் கொண்டு பாய்ந்தான். காரண காரியங்களை விளக்கி, அவர்களைச்சமாதானப்படுத்துவதற்ருத் திருமலைக்கோ