பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கணல் - * 117

தனியறையில் சூட்கேஸில் தான் வைத்திருந்த சில கடிதங் களைக் காணவில்லை என்பதை வைத்து அவளால் நடந் திருப்பவற்றை அதுமானம் செய்துகொள்ள முடிந்தது. அவள் அவனிடம் அதிகம் பேசவேயில்லை. 'மறுபடி டூர் போகிறேன். வர ஒரு வாரம் ஆகும்'-என்று திருமலை சொல்லிக் கொண்டு புறப்பட்டபோது, ஒரு நிமிஷம் நில்லுங்க... உங்ககிட்ட ஒரு கே ள் வி கேட்கணும்...” என்றாள் அவள். என்ன? கேளேன்? - என்று ஒன்றுமே நடக்காதது போல் சிரித்துக் கொண்டு அவளெதிரே நின்றான் திரு அவளுக்கோ உள்ளுற ஒரே எரிச்சல்,

'இது வீடா? இல்லே ஜெயிலான்னு புரியலே...?’’ 'நாம எ ப் ப டி எடுத்துக்கிறோமோ அப்பிடித் தான்.'"- - c - -

சிரித்துக்கொண்டே தான் பதில் சொல்லி விட்டுப் போனான் அவன். பொதுத் தேர்தலுக்கு நாள் நெருங் கியது அவன் எழிலிருப்பில் வழக்கமாக நிற்கிற தொகுதி யிலேயே நிற்கவேண்டுமென்று ஏற்பாடாயிற்று. மொழிப் போரில் விழுப்புண்பட்ட வீரர்-அழிப்போரை எதிர்த் தழிக்கும் ஆற்றல் மறவர்’ -என்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது வெட்டுக் காயத்தோடு அவன் மருத்துவமனையில் படுத்திருந்த காட்சியைக் காட்டும். சுவரொட்டிகள் விளம்பரத்துக்காகத் தயாராயின. இந்த மூறை-சின்ன் உடையாரை எப்படியும் டிபாஸிட் இழக்கச் செய்துவிட வேண்டும் என்று முனைப்பாக வேலை கள்ைச் செய்தான் அவ்ன். மாணவர்கள் எல்லா இடங் களிலும் வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு குடும்பத்தையும் விழுந்து கும்பிட்டு வணங்கி ஆளும் கட்சிக்கு ஒட்டளிக்கக் கூடாதென்று வேண்டினார்கள். விலைவாசிகள் ஏறியிருந் தன. அரிசி, கோதுமை கடைகளில் கிடைக்கவில்லை திருமலை வகையறர் இயக்கத்தினர்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு ஒருபடி அரிசி போடுவதாக வாக்களித்தார் கிள். பிரசங்கம் ம்க்கள் வசியப்படுத்திக் கவரக்கூடிய விகை யில் இருந்தன: மக்களே மெல்ல மெல்ல மயங்கினார்கள்.

மூ-8 - -