பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 நா. பார்த்தசாரதி

உடையார் என்னும் சின்னக் கிருஷ்ணன் அவருடைய மடியிலேயே ஏறி விளையாட முடியும். அந்த இளமையில் திருமலைராஜன் அதைப் பார்த்துப் பொறாமைப்பட்டான். சின்ன் வயதிலேயே எது இருந்ததோ இல்லையோ, அவனுக்கு ரோஷமும் சுயமரியாதையும் அளவுக்கதிகமாக இருந்தன. அதனால் அடிக்கடி குட்டுப்பட நேர்ந்தது. கும் டுப்பட்டுக் குட்டுப்பட்டே வளர்ந்தான் அவன்.

அவனுடைய பதினேழாவது காதில் கடுக்கன் அணிந்த உள் பட்டணத்து திண்ணைப் பள்ளிக்கூட "வாத் தியாரிடம் அவன் சுதேசிப் படிப்புப் படித்த அதே சமயத் தில் சின்னக் கிருஷ்ணன் சகல ராஜ மரியாதைகளுடனும் மதறாசில் ஆங்கிலக் கல்வி கற்றான்.

அந்த ஏப்ரலில் பூரீராஜ சேகர ரகுநாயக உடையார் காலமான போது சின்னக் கிருஷ்ணனைப் போலவே திருமலை ராஜனும் இரகசியமாகத் தன் தந்தையை இழந்தான். - .

அதன் பிறகுதான் அநாதையான திருமலைராஜனின் சோதனைகள் ஆரம்பமாயின. திருமலைராஜனைப் போலவே இருந்த வேறு சிலர் பயந்து வெளியேறி விட்ட னர். உள்பட்டனத்தில திடீரென்று சின்னக் கிருஷ்ணனின் அந்தஸ்து உயர்ந்துவிட்டது. . . . .

அவன் திருமலைராஜன் போன்றவர்களிடம் பேசுவதே. கேவலம் என்று நினைத்து நடந்துகொள்ள ஆரம்பித்தான். ரோஷமுள்ள திருமலைராஜன் சின்னக் கிருஷ்ணனைச் சந்தித்து ஏதோ பேச அவன் கோபத்தில் இவனை 'பாஸ்ட்ர்ட் என்று திட்டினான். அதற்கு என்ன அர்த்தம் எ ன் று திருமலைராஜனுக்கு முதலில் புரிய வில்லை. மறுநாள் முழுவதும் ஏதோ ஒரு சந்தேகத்தால் உந்தப்பட்டு வெளிப்பட்டணத்தின் பதினெட்டு வீதிகளி லும் சுற்றி இறுதியாக ஓர் ஆங்கிலப்பள்ளிக்கூட வாத்தியாரிடம் கேட்டு அவர் அகராதியைப் புரட்டிப் பார்த்துவிட்டுத் தயங்கித் தயங்கி 'தகப்ப