பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 x - - நா. பார்த்தசாரதி

பதவி ஏற்றவுடன் எழிலிருப்புக்குப் போய் டிராவலர்ஸ் பங்களாவில் ஒரு பெண்ணுடன் தான் தங்கி அது ரசாபாச மாகி விட்டதால் அதன் பின் ஆறேழு மாதங்கள் வரை திரு அந்தப் பக்கமே போகவில்லை. பின்பு கட்சி மகாநாடு ஒன்றிற்காக அவன் அங்கே போக நேர்ந்தது. அப்போது தேர்தலில் அவனிடம் தோற்று ஜமீன்தாரான சின்ன உடையார் ஊரில் இருந்தார். மந்திரி என்ற முறையில் உள்பட்டணத்தாருக்கு அவன் மூலம் சில காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டியிருந்தது. கட்சிச் சார்பற்ற முறையில் சில உள்பட்டனத்துப் பெரியவர்கள் அவனுக்கு ஒரு வரவேற்புக் கொடுக்க விரும்பித் தேடிப்போய் அழைத் தார்கள். அப்போது அவனுள்ளத்தின் ஆழத்தில் புற்றடி நாகத்தைப் பேசல் சுருண்டுகிடந்த பழிவாங்குகிற உணர்வு சீறிப் படமெடுத்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க விரும்பினான் அவன். ஜமீன் தாரே திருமலையைத் தேடிவந்து காலில் விழுகிறார். என்று ஊர்ப் பாமர மக்கள் பேசும்படி செய்ய வேண்டும் என்று அப்போது அவனுக்குத் தோன்றியது. .

"உள்பட்டணம் என்பது உடையாருடையது. நான் அங்கே வரணும்னா உடையாரும் ராணியுமே வந்து நேரிலே என்னை முறையா அழைச்சாகணும். இல்லாட்டி வர முடியாது - என்று அடம் பிடித்தான் திரு. இப்படி அவன் நிபந்தனை போட்டதும் உள்பட்டணத்துப் பிரமுகர் களுக்குத் தர்ம சங்கடமாகப் போயிற்று. புரம்பரைப் பெரிய மனிதரான உடையார் தேர்தலில் அவனிடம் தோற்ற அவமானம் பே தாதென்று இப் போது அவனையே தேடி வந்து அழைப்பதற்கு ஒப்புவாரா என்று எண்ணித் தயங்கினார்கள் - . -

ஒரு வேளை உடையார் அவனை அழைக்க இணங்கி வந்தாலும் வந்துவிடலாம். ராணியும் உடன் வருவதென் பது எப்படி முடியும்? என்றெல்லாம் யோசித்துக் குழம்ப வேண்டியிருந்தது. போகாத ஊருக்கு வழி சொல்வதாக