உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

萱盛 J5f・ பார்த்தசாரதி

மனங் கவர்ந்த அமைச்சரே வருக வருக! "எழிலிருப்புத் தந்த ஏந்தலே வருக வருக!' என்பது போல் வாசகங்கள் அந்த வளைவுகளை அணிசெய்'தன. வாலிப வயதில் வாய் கூசாமல் தன்னை 'பாஸ்டர்ட்” என்று திட்டிய அதே சின்னக் கிருஷ்ணனிடமா இத்தனை பணிவும், நயமும், அடக்கமும் வந்திருக்கின்றன என்பதைத் திருவினால் நம்பவே முடியவில்லை. சின்னக் கிருஷ்ணனிடம் மாறு: தலும் , வளர்ச்சியும் தெரிந்தன. தன்னைப் பொறுத்துச் சின்னக்கிருஷ்ணனிடம் ஏற்பட்டிருந்த அதே மாறுதல் அவனைப் பொறுத்துத் தன்னிடம் ஏற்படவில்லை. என்பதும் திருவுக்குப் புரிந்தது. ஜமீன்தாருக்கு உடலில் மூப்பு வந்ததோடு மனமும் மூத்துக் கனிந்திருந்தது. அவனுக்கோ உடல் மட்டுமே மூத்து முற்றியிருந்தது. தன் ஆட்களை ஏவிவிட்டு உள்பட்டண வரவேற்பில் வான வேடிக்கை பட்டாக எல்லாம் ஒன்று குறையாமல் தடபுடல் படவேண்டும் என்று ஏற்பாடு செய்தான். :

சின்ன உடையாரிடமும் சிலர் மந்திரி திருமலை ராசனுக்கு உள்பட்டணத்தில் வரவேற்புத் தருவதை ஆட்சேபித்தார்கள். தேர்தலில் அவருக்கு ஆதரவாகவும் திருமலைக்கு எதிராகவும் வேலை செய்த திருமலையின் மைத்துனனே கடுமையாக ஏதிர்த்தான்: "ஒழுக்கங். கெட்டிவங்களுக்கு எல்லாம் வரவேற்பு ஒரு கேடா, அதிலே பாம்பரைப் பெரிய மனுஷரான நீங்க வேற போய்க் கை கட்டி வாய் பொத்தி நிற்கணும்கிறது எனக்கு அறவே பிடிக்கல்லீங்க! நாம் எலெக்ஷன்லே தோத்துப் போனா லும் நமக்கு ஒரு கட்சி இருக்கே?' - அதெல்லாம் சரிதான்ப்பா! ஆனா, இதிலே அரசியலோ கட்சியோ வேண்டாம்னு பார்க்கிறேன். எந்தக் கட்சியானால் என்ன? ஏதோ இந்த ஊர்க்காரன் ஒருத்தன் ஜெயிச்சு மந்திரியாகி வந்திருக்கான். இதைப் பாராட்டறதுலே தப்பு ஒண்னுமில்லே' என்றார் ஜமீன்தார். • . . . -