பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் 14?

எழில்ராஜாவைத் தீர்த்துக் கட்டிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தான். உளவாளிகள் முகம் தெரிந்த, தகவலின்படி எழில்ராஜா அபாரத் துணிச்சலும் தைரியமும் உள்ளவன் என்று தெரிந்தது. திருவல்லிக்கேணியிலோ, ராயப்பேட்டையிலோ தன்னையொத்த வயதுள்ள இரண்டு. மூன்று இளம் பத்திரிகையாளர்களுடன் ஒர் அறையில். தனியாக வசிக்கிறான் என்றும் தெரித்தது. எப்படிக் கண்ணி வைத்து எந்த மாதிரி ஆளைத் தீர்ப்பது என்று. திருவும் அவனுடைய அடியாட்களும் யோசித்தனர். எழில் ராஜாவின் இலக்கு திருவாக இருந்ததால் திரு மறைமுகமாகச் சம்பந்தப்பட்டிருந்த ஒரு கள்ளச் சாராயத் தொழிற். சாலை அமைந்திருந்த வளசரவாக்கத்து மாந்தோப்புக்கு அன்றிரவு திருவே வர இருப்பதாகத் தகவல் சொல்லி, எழில்ராஜாவை அங்கே இழுக்கலாம் என்று திட்டமிட் டனர். தகவலை எழில்ராஜாவிடம் போய்ச் சொல்லுகிற, வர்கள் கதர்ச் சட்டை குல்லாய் அணிந்து. தேசிய ஆட்கள் போலத் தங்களைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்றும் ஏற்பாடாயிற்று அப்போதுதான் எழில்ராஜாவுக்கு அந்தத் தகவலில் நம்பிக்கை ஏற்பட்டு அவர்களோடு போய் அதைப்பற்றி ஒரு கட்டுரை தயாரிக்கத் தோன்றும் என்று. திருவும், மற்றவர்களும். நம்பினார்கள். கூட்டிக்கொண்டு. போய் ஆளரவமற்ற பகுதியில் எழில்ராஜாவின் வர லாற்றை அன்றிரவே தீர்த்து முடிவுரை எழுதி முடித்து. விடலாம். என்பது அவர்கள் திட்டமாயிருந்தது.

ஆட்களுக்கு எல்லாம் சொல்லிப் பணம் கொடுத்து அனுப்பி விட்டு, அவன் வேறு வேண்லக்குக் கிளம்பலாம். என்று எழுந்த போது புலவர் வேணுகோபால் சர்மா அவனைத் தேடி வந்தார். "வாங்க சாமீ! ஏது ரொம்ப நாளாக் காணவே இல்லியே?' என்று அவன் புலவரை வரவேற்றான். சினிமா வேலைகள் குறைந்து அவன் பதவியேற்று மந்திரியான பின்பு எப்போதாவது அவன் எழுத வேண்டிய கட்டுரைகள், அறிக்கைகளை எழுதித்.