பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் - 149.

அவன் கைகளைப் பிசைந்தான். ஏவி அனுப்பியிருக்கும் குண்டர்களைத் தடுப்பதற்கு வேறுசில குண்டர்களைப்பின் தொடர்ந்து அனுப்பலாமென்று டெலிடோனைச் சுழற்றி னான். அவனுக்கு வேண்டிய எண் கிடைக்கவில்லை. அவன் எதையும் வாய் விட்டுச் சொல்லாததால் அப்போது அவனுடைய பதற்றத்துக்கும், குழப்பத்துக்கும் காரணம் என்னவென்று சர்மாவுக்குப் புரியவில்லை. அவர் திகைத்

frff . - - - த திருவுக்கு உடல் பற்றி நடுங்குவதையும் வேர்த்து விறு விறுப்பதையும் பார்த்து அவருக்கு ஒன்றுமே விளங்க வில்லை. இதுவரை அவனை இப்படி நிலையில் அவர் பார்க்க நேர்ந்ததே இல்லை. -

'சாமீ. கன்னையா எங்காவது ஆப்பிடுவானா பாருங்க...” என்றான் அவன். குரல் நடுங்கிக் குழறியது அவர் கண்னையனைத் தேடிப் போனார். குடி, கூத்து என்று தாறுமாறாக வாழ்ந்ததனால் திடீரென்று அவனுக்கு உடல் நிலை கெட்டு ஏதோ ஆகிவிட்டதென்று நினைத்துக் கொண்டார் அவர். பங்களா முகப்பு, தோட்டம், அலுவலக அறை எல்லா இடங்களிலும் தேடி விட்டுத் திருவின் உதவி யாளனான கன்னையன் எங்கேயும் தென்படாததை உள்ளே அவனிடமே போய்த் தெரிவித்து விட்டு, ! உங்க ளுக்குத் திடீர்ன்னு உடம்பு ஏதோ சரியில்லேன்னு நினைக் கிறேன். டாக்டரைக் கூப்பிடணும்னா நானே ஃபோனில் கூப்பிடறேனே...? இல்லேன்னா வாசல்லே செண்ட்ரியா நின்னுண்டிருக்கானே அந்தப் பேர்லிஸ் கான்ஸ்டேபிளைக் - கூப்பிடச் சொல்லட்டுமா?-என்றார் சர்மா. நெஞ்சைப்

பிசைந்து கொண்டு உட்கார்ந்து விட்ட திரு அவரிடம் , *வேண்டாம் என்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் ஆட்டினான். 'கொலை பாதகனே-என்று அவனு டைய மனச்சாட்சியே அவனை இடித்துக் காட்டியது. அப்போது அந்த நிலையில் தன்னை யாரும் கவனிப்பதே அவனுக்குப் பிடிக்கவில்லை. நீர் போகலாம்-என்பதற்கு