பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

二50 நா. பார்த்தசாரதி

அடையாளமாகச் சர்மாவை நோக்கி ஜாடை காட்டினான் அவன். .

"நான் வரேன். உட்ம்பைக் கவனிச்சுக்கோங்கோ. பம்பரமா அலையறேள். உங்களுக்கு ஒய்வு வேணும். அந்தத் தமிழ் இசை கான்பரன்ஸ் தலைமைப் பேச சைத் தயாரிச்சுண்டு நாளன்னிக்கு மறுபடி வந்து பாக்கறேன்என்று சொல்லிக் கொண்டு சர்மா புறப்பட்டார் .

அதற்கு முந்திய விநாடிவரை திருவுக்குப் பாவ புண்ணி யங்களில் நம்பிக்கை கிடையாது. நல்வினை, தீவினை களை அவன் என்றும் பொருட்படுத்தியதே இல்லை. விதியை நம்பியதில்லை. இப்போது என்ன காரணமோ தெரியவில்லை. அவன் அந்தரங்கம் அவற்றை எல்லாம் எண்ணி நடுங்கியது. தான் செய்த பாவங்களும், தீவினை களும் எல்லாம் சேர்ந்து தன் சொந்த மகனைத் தானே கொலை செய்ய நேரும்படி இப்படிச் சதி புரிந்து விட்ட னவோ என்று தோன்றியது. ஏற்கெனவே பிளட்பிரஷர், நெஞ்சுவலி எல்லாம் தொடங்கியிருந்தன. வயது வேறு ஆகி இருந்தது. திருடனுக்குத் தேள் கொட்டிய மாதிரி யாரிடமும் விட்டுச் சொல்ல முடியாமல் திணறினான் அவன். 'இப்படி நியாயமாக ஒரு பச்சிளங் குருத்தைக் கொல்லப் போகிறார்கள்! போய் யாராவது தடுத்து விடுங் களேன்' என்று அவனே சொல்லி மாட்டிக் கொள்ளவும் முடியாமல் இருந்தது.

சண்பகத்தின் லட்சுமிகரமான முகம் அவனுக்கு நினைவு வந்தது. அவளுக்கும் தனக்கும் முறிவு ஏற்பட்ட பின் அரசியலில் தன்னை எதிர்த்தே வேலை செய்த மைத் துனன் நினைவுக்கு வந்தான். சண்பகத்தின் மரணத்தின் போது மொட்டை போட்டுக் கொண்டு கொள்ளிச்சட்டி - ஏந்திச் சென்ற இதே மகன் நினைவுக்கு வந்தான். வித். எவ்வளவு கோரமான சதியைச் செய்துவிட்டது எ றெண் ணியபோது சிறுகுழந்தை போல் குமுறிக்குமுறி அழுதான் திரு. ஏதாவது அற்புதம் நடந்து எழில்ராஜா தன்னைக்